ராமஜெயம் கொலை வழக்கு.. 13 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனையா? நவ.14-ல் மீண்டும் விசாரணை!
திருச்சி: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை தொடர்பாக 13 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான விசாரணை நவம்பர் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி ராமஜெயம்.. திருச்சி திமுகவின் முகமான அமைச்சர் கே.என்.நேருவின் ஆல் இன் ஆல். திருச்சியில் பல பிசினஸ் ராமஜெயம் கண்ணசைவில்தான் நடந்து கொண்டிருந்தன. 10 ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சி நிலவரம் இது.
2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அதிகாலையில் நடைபயிற்சி சென்ற ராமஜெயம் வீடு திரும்பவில்லை. ராமஜெயம் எங்கே போனார் என தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது திருச்சி- கல்லணை சாலையில் முட்புதரில் இரும்பு கம்பிகளால் உடல் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ராமஜெயம்.

துப்பு துலங்காத கொலை
ராமஜெயம் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படுகொலை வழக்கை திருச்சி போலீசார் முதலில் விசாரித்தனர்; பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். ஒருகட்டத்தில் சிபிஐயும் விசாரித்தது. ஆனால் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ராமஜெயம் கொலை வழக்கு அவிழ்க்கப்பட முடியாத மர்ம முடிச்சாகவே தொடர்ந்தது.

12 ரவுடிகள் மீது சந்தேகம்
இதனைத் தொடர்ந்து ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கு குற்றவாளிகள் 12 பேர் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த 12 ரவுடிகளையும் உண்மை கண்டறியும் சோதனைக்குட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

உண்மை கண்டறியும் சோதனை
இது தொடர்பாக பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளி தொடர்புடைய 12 ரவுடிகள் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனால் 12 ரவுடிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் ராமஜெயம் குடும்பத்தினர்தான் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கின்றனர்; ஆகையால் அவர்களிடம் மீன்டும் விசாரிக்க வேண்டும் என ரவுடிகளின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

நவம்பர் 14-க்கு ஒத்திவைப்பு
இவ்வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று நடைபெற்றது. அப்போது, 12 பேரிடமும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில்தான் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவக்குமார், இவ்வழக்கு விசாரணையை வரும் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications