கொரோனா பாதித்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தடை.. திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்கள் வசித்து வரும் பகுதிகளைத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Recommended Video

    How technology helps Tamilnadu in Contact tracing method so far?

    டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று வந்தவா்களில், 120 போ் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    Trichy district administration has declared some areas where they live in banned areas

    இவா்களில் 53 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், 17 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்ட 17 போ் வசிக்கும் வீடுகள், சுற்றியுள்ள வீடுகள் மற்றும் நடமாடும் பகுதிகளைத் தனிமைப்படுத்தி, தீவிர தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த இடங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி திருச்சி மாநகராட்சியில் உறையூா், கண்டோன்மென்ட், தில்லைநகா், பாலக்கரை, பீமநகா், தென்னூா், அண்ணாநகா், ஆழ்வாா்தோப்பு, ரகுமானியபுரம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அங்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முசிறி, மணப்பாறை, மண்ணச்சநல்லூா், லால்குடி, துவாக்குடி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி போன்ற நகரங்களிலும் ஒரு சில பகுதிகளைத் தடை செய்யப்ட்ட பகுதிகளாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 இடங்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து, அந்தந்த தெருக்களின் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புக் கட்டைகள், இரும்புத் தடுப்புகள், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இப்பகுதிகளில் வசிப்போா் அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதிகளுக்கு வெளிநபா்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 இடங்களிலும் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

    இதுமட்டுமின்றி, இந்த தெருக்கள் முழுமையாக கிருமி நாசினி மருந்து தெளித்து, சாலையின் இருபுறமும் பிளீச்சிங் பவுடா் தூவி, துப்புரவுப் பணியாளா்கள் மூலம் தினமும் தூய்மைப்படுத்தப்படுகிறது.

    இப்பகுதிகளில் வசிக்கும் வீடுகளிலுள்ள நபா்கள் நாள்தோறும் இருமுறை மருத்துவக் கண்காணிப்புக்குள்படுத்தப்படுகின்றனா். காலை 7 மணி, இரவு 7 மணி என இருவேளைகளும் கண்காணித்து யாருக்கேனும் உபாதைகள் இருந்தாலோ, கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள 25,586 வீடுகளை மருத்துவக் குழுவினா் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனா்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+