ஏ நில்லுடா.. ******.. கடனை திருப்பிக்கேட்டவரை.. அரிவாளால் வெட்ட துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் தாக்க சென்ற திமுக கவுன்சிலரின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் பல இடங்களில் பெண்கள் வெற்றிபெற்றனர். ஆனால் பல இடங்களில் பெண் கவுன்சிலர்கள் அதிக அளவில் வென்று இருந்தாலும் அவர்களின் கணவர் அல்லது அப்பாதான் களத்தில் பணிகளை செய்து வருகின்றனர் என்று புகார் எழுந்தது. பெண் கவுன்சிலர்களை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அவர்கள் வீட்டு ஆண்கள்தான் தினமும் ஆய்வு பணிகளை செய்கின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், எம்பி கனிமொழியும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். கவுன்சிலர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள்தான் பணிகளை செய்ய வேண்டும்.

அவர்கள் வீட்டு ஆண்கள் நாட்டாமை போல செயல்பட கூடாது என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

திமுக கவுன்சிலர் நித்யா

திமுக கவுன்சிலர் நித்யா

இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர் நித்யா சர்ச்சையில் சிக்கி உள்ளார். திருச்சி மாவட்டம் தெற்கு தத்தமங்கலம் அருகே தழுத்தாளப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் நித்யா. இவரின் கணவர் வெற்றிசெல்வன். திருச்சியில் வெற்றிச்செல்வன் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 2 லட்சம் ரூபாய் வரை இவர் குணசேகரனிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

குணசேகரன் கடனை திருப்பி கேட்ட நிலையில் வெற்றிச்செல்வன் அதை திருப்பி கொடுக்காமல் போக்கு காட்டி உள்ளார். அதோடு கடனுக்கு வட்டியும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வெற்றிச்செல்வன் வீட்டிற்கே சென்று குணசேகரன் காசை திருப்பி கேட்டுள்ளார். அப்போது குணசேகரன் தம்பிகளும் உடன் சென்றுள்ளனர்.வெற்றிச்செல்வன் குடிபோதையில் இவர்களை மோசமாக திட்டி உள்ளார்.

காசை கேட்டார்

காசை கேட்டார்

****** காசு கேக்குறியா.. காசு எல்லாம் கொடுக்க முடியாது. ஏ கொன்னு புடுவேன். ஓடிடு.. முடிஞ்சா அடிடா என்று வெற்றிச்செல்வன் குணசேகரனை அரிவாளால் துரத்தி உள்ளார். அரிவாளை எடுத்துக்கொண்டு வெட்டுவது போல வெற்றிச்செல்வன் குணசேகரனை துரத்தி உள்ளார். அரிவாளை கோபமாக எடுத்துக்கொண்டு சுற்றி சுற்றி வெட்டுவது போல வெற்றிச்செல்வன் மோசமாக நடந்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வழக்கு

வழக்கு

வெற்றிச்செல்வன் மனைவியும், திமுக ஒன்றிய கவுன்சிலருமான நித்யா தனது கணவரை தடுக்க முயன்றார். ஏங்க நில்லுங்க. போகாதீங்க.. ஏங்க சொன்னதை கேளுங்கள் என்று மீண்டும் மீண்டும் நித்யா சத்தம் போட்டார். ஆனால் இதை கேட்காமல் வெற்றிச்செல்வன் ரவுடி போல நடந்து கொண்டார். தற்போது இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெற்றிச்செல்வன் தற்போது தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+