Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் அப்பா வாங்கி வந்த புது ஆட்டோ! குடும்பத்துக்கே குஷி.. மகளுடனான முதல் பயணத்தில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கூடுதல் என்று தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன.. கடந்த ஆகஸ்ட் 2025-ல் திருச்சி நகரில் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களில், மற்ற வாகனங்கள் சம்பந்தப்படாத தனிநபர் விபத்துக்கள் தான் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு துயர சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

பொதுவாக புதிய வாகனங்களை வாங்குவதாக இருந்தால் அதற்கு முன்பு, தேவை, பட்ஜெட், வாகனத்தின் வகை (பெட்ரோல், எலக்ட்ரிக்) மற்றும் அம்சங்கள், இன்சூரன்ஸ், மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும். எலக்ட்ரிக் வாகனங்கள் என்றால், அவற்றின் பேட்டரி ஆயுள், சார்ஜிங் வசதி, மற்றும் பராமரிப்பு செலவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

Trichy Auto Manachanallur

புது வாகனங்கள்

சில சமயம், எவ்வளவுதான் பார்த்து பார்த்து வாங்கினாலும், புதிதாக வாங்கும் வாகனங்கள் பழுதடைவதுண்டு. அந்தவகையில், ஆட்டோ புதிதாக வாங்குவதாக இருந்தால், அதிக மைலேஜ் தரும் ஆட்டோவே அதிக லாபம் தரும் என்பார்கள்..

புதிதாக வாங்கும் ஆட்டோ 3+1 நபர்களுக்கு மேலே ஏற்றத்தக்கதா? அதற்கான உதிரி பாகங்கள் எளிதாக கிடைக்குமா? உங்கள் ஏரியாவில் அதற்கான சர்வீஸ் சென்டர் இருக்கிறதா? பிரேக்கிங் சிஸ்டம் நன்றாக இருக்கிறதா? ஹெட்லைட், இன்டிகேட்டர், கண்ணாடி, போன்றவை அனைத்தும் சரியாக உள்ளதா? கிளட்ச், கியர் இலகுவாகவும் உள்ளதா? பராமரிப்பு செலவு குறைவா? என்பதையெல்லாம் கவனித்துவிட்டுதான் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதிய ஆட்டோ

இந்நிலையில் திருச்சியில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்துள்ளது தில்லாம்பட்டி.. இங்கு வசித்து வருபவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.. திருமணமான ராஜ்குமாருக்கு கிரேசிகா (வயது 9) என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும் உள்ளனர். கிரேசிகா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருபவர்..

நேற்று முன்தினம் ராஜ்குமார் சொந்தமாக ஒரு புதிய ஆட்டோ வாங்கி இருக்கிறார்.. நேற்றைய தினம், குழந்தைகள் 2 பேரும், புதிய ஆட்டோவில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ராஜ்குமாரிடம் சொல்லி உள்ளனர்..

அப்பா கண்முன்னே துடிதுடித்த மகள்

உடனே ராஜ்குமாரும் மகனையும், மகளையும் ஆட்டோவில் உட்கார வைத்து கொண்டு அந்த பகுதியில் சுற்றி காண்பித்துள்ளார்... அப்போது, தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கிரேசிகா படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. ராஜ்குமாரும், லிதன் ராமும் காயங்களுடன் உயிர் தப்பினார்கள்..

செல்ல மகள் - போஸ்ட் மார்ட்டம்

செல்ல மகள் தன்னுடைய கண்முன்னேயே துடிதுடித்து உயிரிழந்ததை பார்த்து ராஜ்குமார் கதறி கதறி அழுதது பார்ப்போரையும் கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேசிகாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய ஆட்டோ திடீரென கட்டுக்கடங்காமல் சென்று, உயிர்ப்பலியையும் வாங்கியிருப்பது திருச்சி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

திருச்சி விபத்துகள்

திருச்சியை பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கூடுதல் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2025-ல் திருச்சி நகரில் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களில், மற்ற வாகனங்கள் சம்பந்தப்படாத தனிநபர் விபத்துக்கள் தான் முதலிடத்தில் உள்ளன.

இதில் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளனர். அதிவேகமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+