திருச்சியே துள்ளுது.. விழுந்து விழுந்து "பெருமாளுக்கு" சீர்வரிசை: கோயில்ல யார் பாருங்க? செம மணப்பாறை
திருச்சி: திருச்சியில் நடந்த சம்பவம் ஒன்று, தமிழக மக்களை நெகிழ வைத்து வருகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, திருப்புவம் முதுவந்திடல் கிராமமாக இருந்தாலும்சரி, தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமமாக இருந்தாலும் சரி, களைகட்டிவிடும். இங்குள்ள இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை இங்கு சிறப்பாக கொண்டாடுவார்கள்.

பண்டிகைகள்: ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கம். அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்..
பொதுவாக இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.. இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருப்பார்கள்..
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குவார்கள்.. பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பிறகு, ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குவார்கள்.
விபூதி முக்காடு: பெண்கள் முக்காடிட்டு உட்கார்ந்து கொள்ள, ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைப்பர்.. இதன் மூலம் பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாது என்பது இவர்களின் நம்பிக்கை.. தீக்குழி இறங்கியவர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்குவார்கள்.. இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்த, முஸ்லிம் மக்கள் விபூதி வழங்கி ஆசீர்வதிக்கும் காட்சி நெகிழ்ச்சியை தந்துவிடும்..
இப்படி, இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் இறுக்கமாகவே பயணித்துகொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, கடலூரில் ஒரு சம்பவம் நடந்தது..
கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடந்துவந்தபோது, திடீரென 2 முஸ்லிம் பெண்கள் கோயிலுக்கு வந்தனர்.. அதில் ஒரு பெண், கையில் குழந்தையை தூக்கி கொண்டு வந்திருந்தார். கோயிலுக்குள் நுழைந்த இந்த 2 பெண்களும், அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
அம்மன் வழிபாடு: அம்மன் அருகே நின்றுகொண்டு நீண்ட நேரம் சாமி கும்பிட்டனர்.. பிறகு, அம்மனிடம் மண்டியிட்டு நமஸ்காரம் செய்து, மறுபடியும் வழிபாடு செய்தனர்.. அதில் ஒரு பெண் தன்னுடைய குழந்தையையும் வழிபாடு செய்ய வைத்தார்.. இந்த காட்சிகள்தான் இணையத்தில் வீடியோவாக வைரலானது.
இதோ இப்போது மணப்பாறையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. வளநாட்டில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கு பிறகு, நேற்றுதான் கும்பாபிஷேகம் நடந்தது.. இதனல், திருக்கல்யாண வைபவத்திற்காக, இஸ்லாமியர்கள் மலர்மாலைகள், தேங்காய், பழங்கள், உப்பு, அரிசி, பருப்பு, நெய் மற்றும் பீரோ என மொத்த சீர்வரிசையையும் ஊர்வலமாக கொண்டு வந்துவிட்டனர்.

பிரசாதம்: வளநாடு ஜமாத் சார்பில் இப்படி ஒரு அமர்க்களமான ஏற்பாடு செய்யப்பட்டது. வளநாடு முஹைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து, வெங்கடேஷ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகிகளிடம் இஸ்லாமிய சகோதரர்கள் வழங்கினார்கள்.
பிறகு, இஸ்லாமியர்களுக்கு திருக்கல்யாண பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டதுடன், ஜமாத் நிர்வாகிகளுக்கு கோவில் நிர்வாகிகள் பொன்னாடையும் போத்தி மரியாதை செலுத்தப்பட்டது. பெருமாளுக்கு இஸ்லாமியர்கள் சீர் தந்த இந்த நிகழ்வு, மிகப்பெரிய நெகிழ்ச்சியை தருணத்தை, அந்த பெருமாள் கோயிலில் ஏற்படுத்தியது.
ஈரம் மனம்: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும்.. ஈரம் கசியும் மனசு இங்கு இருக்கும்வரை.. சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த இஸ்லாமிய - இந்துமத உணர்வுகள் நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன... தொடர்ந்து தழைத்தோங்கட்டும் மதசகிப்புத்தன்மையும், மனிதநேயமும்... அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்.. !!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications