அடேங்கப்பா.. இவ்வளவு வசதிகளா?அசர வைக்கும் திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம்! எப்போது திறப்பு?
திருச்சி: திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் மலைக்க வைக்கின்றன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2வது முனையம் கட்டுவதற்காக இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமத்தால் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் ஒரு வழியாக 5 ஆண்டுகள் கழித்து இப்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் திறப்பு விழா நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அநேகமாக வரும் ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்த வைக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த 2வது முனையமானது 2 அடுக்குகளைக் கொண்டதாக திகழ்கிறது. இதில் ஒரே நேரத்தில் உள்நாடு, வெளிநாடு என மொத்தமாக சேர்த்து 6,000 பயணிகளை கையாள முடியும் என்பது கூடுதல் தகவலாகும்.
திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையத்தில் புறப்பாடு பகுதியில் 10 வாயில்களும் வருகை பகுதியில் 6 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள்,40 இமிகிரிஷேன் மையங்கள், 48 செக் இன் மையங்கள், 3 விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட், 1,000 கார் பார்க்கிங் வசதி என சிறப்பமசங்களின் லிஸ்ட் நீள்கின்றன.
இன்னும் இதில் ஹைலைட் என்னவென்றால் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை 2முனையத்தின் நுழைவு வாயிலில் அமைத்திருப்பது தான். இது வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன. மேலும், சோலார் மூலம் மின்சாரம் பெறத்தக்க வகையில் விமானநிலையத்தின் 2வது முனைய மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் 75 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் சரி, திருச்சி விமான நிலையத்துக்கு எதற்கு 2வது முனையம் என்ற கேள்வி பலருக்கும் எழும். திருச்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள வளரும் மாநகரமாகும். சென்னை, கோவைக்கு இணையாக திருச்சி மாநகரத்தின் உள்கட்டமைப்பு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. விமான சேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. திருச்சி ஹைதரபாத், திருச்சி டெல்லி, திருச்சி வியட்நாம் என நேரடி விமான சேவைகள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்னும் வரும் நாட்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன. இதனால் திருச்சி விமான நிலையத்துக்கு 2வது முனையம் தேவை என்பது காலத்தின் அவசியமாக பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications