வெறும் அட்டை பெட்டிதான் மிஞ்சியது.. மொத்த கடையும் காலி.. அதிர வைக்கும் லலிதா ஜூவல்லரி படுகொள்ளை!

கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    லலிதா ஜுவல்லர்ஸ் கடையை சூறையாடிய திருடர்கள் | Robbers strike at Lalitha Jewellery in Trichy

    திருச்சி: "வெறும் அட்டை பெட்டி மட்டும்தாங்க இருக்கு. கடையில் இருந்த மொத்த நகையையும் திருடிட்டு போய்ட்டாங்க" என்று லலிதா ஜூவல்லரி ஊழியர்கள் பதறியவாறே போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடந்த ஆய்வில்தான், தலையில் குல்லா, முகமூடி, கிளவுஸ், ஜெர்கின்.. சகிதம் லலிதா ஜூவல்லரிக்குள் 2 பேர் நுழைவது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட அருகேதான் லலிதா ஜூவல்லரி கடை உள்ளது. இது பண்டிகை காலம் என்பதால் புது டிசைன் நகைகள் கடைக்குள் இருந்தன.

    காந்தி ஜெயந்தி லீவு என்பதால், கஸ்டமர்கள் நிறைய பேர் இன்று வர வாய்ப்புள்ளது என்பதால்தான் கடையை வாடிக்கையாளர்கள் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு சீக்கிரமாக ஊழியர்கள் திறந்தனர். அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இதனால், பணியாளர்கள் முன்னதாகவே வந்து கடையைத் திறந்தனர்.

    குத்தகை

    குத்தகை

    அப்போதுதான் சுவரில் இருந்த பெரிய ஓட்டையை கண்டு அதிர்ந்தனர். இந்நிறுவனம், அருகில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு எடுத்து அதில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கொள்ளையர்கள்

    கொள்ளையர்கள்

    அந்த மைதானத்தின் வழியாக பக்கவாட்டு சுவரில்தான், கொள்ளையர்கள் துளையிட்டு உள்ளே வந்துள்ளனர். கோடிக்கணக்கான மதிப்பில் நகையை காணோம் என்றதுமே ஊழியர்கள் டென்ஷன் ஆகி பதறி விட்டனர். காலையில் 8 மணிக்கே இவர்கள் பதற்றமாக இருப்பதை பார்த்து, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் விசாரித்துள்ளனர்.

    வெறும் அட்டை பெட்டி

    வெறும் அட்டை பெட்டி

    அதற்கு ஊழியர்கள், "வெறும் அட்டை பெட்டி மட்டும்தாங்க இருக்கு. கடையில் இருந்த மொத்த நகையையும் திருடிட்டு போய்ட்டாங்க" என்று சொல்லி உள்ளனர். இதையடுத்து, கமிஷனர் அமல்ராஜ் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை, ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பெரிய பரபரப்பு

    பெரிய பரபரப்பு

    இப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே செயல்பட்டு வந்த தனியார் வங்கியின் சுவற்றிலும் ஓட்டை போட்டு, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தார்கள். ஆனால், அந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில், இப்போது லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+