திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தைகள் மாஸ்க் போட்டுக் கொண்டு.. சாவகாசமாக உள்ளே புகுந்த 2 பேர்.. லலிதா ஜுவல்லரி பயங்கரம்!

கொள்ளையர்களின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    லலிதா ஜுவல்லர்ஸ் கடையை சூறையாடிய திருடர்கள் | Robbers strike at Lalitha Jewellery in Trichy

    திருச்சி: அடையாளமே சுத்தமாக தெரியவில்லை.. குழந்தைகள் அணியும் முகமூடியை அணிந்து கொண்டு, சாவகாசமாக 2 பேர் லலிதா ஜுவல்லரி கடைக்குள் திருடும் 2 கொள்ளையர்களின் சிசிடிவி காட்சியில் இருந்த போட்டோக்களை போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர்.
    திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள லலிதா ஜூவல்லரி கடையில் இன்று விடிகாலை மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    கடையின் சுவற்றில் பெரிய துளையை போட்டு 2 பேர் உள்ளே வந்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். 6 நைட் டியூட்டி வாட்ச்மேன்கள் கடைக்கு வெளியே பணியில் இருந்தும் இந்த கொள்ளை நடந்துள்ளது.

    அதிர்ச்சியில் திருச்சி.. பெரிய ஓட்டை போட்டு.. ரூ.50 கோடி நகைகள் அபேஸ்.. லலிதா ஜூவல்லரியில் அட்டகாசம்அதிர்ச்சியில் திருச்சி.. பெரிய ஓட்டை போட்டு.. ரூ.50 கோடி நகைகள் அபேஸ்.. லலிதா ஜூவல்லரியில் அட்டகாசம்

     துளை

    துளை

    இதுகுறித்து கமிஷனரே நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். கதவை உடைக்காமல் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்று பார்த்த போது தான் பின்பக்க சுவற்றில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கிருந்த சிசிடிவி காட்சியையும் ஆய்வு செய்ததில், கடைக்குள் நுழைந்தவர்கள் நபர்கள் 2 பேர் என தெரிகிறது.

     முதல் மாடி

    முதல் மாடி

    அவர்கள் முகமூடிகள் அணிந்துகொண்டு சாவகாசமாக நகைகளை திருடுகிறார்கள். அதாவது கீழ்தளத்தில் மொத்த நகைகளையும் கொள்ளை அடித்து கொண்டு, முதல் மாடிக்கு சென்று அங்கிருந்தும் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். இவர்கள் வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிறார்கள்.

     மாஸ்க்

    மாஸ்க்

    இந்த போட்டோவைதான் போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர். குழந்தைகள் அணியும் மாஸ்க் போல இருக்கிறது. விலங்குகளின் முகசாயல் கொண்ட முகமூடிகளைதான் இருவரும் அணிந்துள்ளனர். உஷாராக கையில் கிளவுஸ்களையும் அணிந்துள்ளனர். இருவரின் கண்ணை தவிர வேறு எதுவுமே அடையாளம் தெரியவில்லை. முழுவதுமாக தங்களை மறைத்து கொண்டு வந்துள்ளனர்.

     சிசிடிவி போட்டோ

    சிசிடிவி போட்டோ

    இவர்கள் 2 பேருமே சாவகாசமாக நடந்து சென்று கொள்ளைடிப்பது தெரிகிறது. கடையைப் பற்றி நன்றாக விஷயம் தெரிந்தவர்களே இப்படி செய்திருக்க முடியும் என்கிறார்கள் போலீசார். உள்ளே நுழைந்தது 2 பேர் என்றாலும், துளையிட்ட பகுதிக்கு வெளியே வேறு யாராவது இவர்களுக்கு கொள்ளைக்கு உதவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    சவால்

    சவால்

    ஏனெனில், மொத்தம் 100 கிலோ நகைகள் கொள்ளை போயுள்ளது. திருச்சியில் இது போன்ற ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் இதற்கு முன் நடந்ததே கிடையாது என்பதால் இந்த சம்பவம் நம் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

    English summary
    Rs 50 Crores Jewelry Robbery in Lalitha Jewelery and thefts photo releases by Trichy police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X