திருச்சி மக்களவைத் தொகுதி யாருக்கு? முஸ்லீம் லீக் Vs காங்கிரஸ்? நெருங்கும் தேர்தல்! பரபரக்கும் களம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது, திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது.

திருச்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இதயமாக விளங்கக் கூடிய ஒரு ஊராகும். திருச்சியிலிருந்து தமிழ்நாட்டின் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரத்தில் சென்றடைந்து விட முடியும். அரசியலில் திமுகவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த ஊர் என்று கூட திருச்சியை சொல்லலாம்.

Trichy Lok Sabha seat for whom? Muslim League Vs Congress? The approaching election! Exciting field!

இப்படி பல்வேறு பெருமைகளையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே திருச்சியில் 2 பவர்ஃபுல் அமைச்சர்கள் இருப்பதால் புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் வந்து தான் இந்தக் காரியத்தை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

திருச்சி மாநகருக்கும், மாவட்டத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேசும் கவனித்துக் கொள்கிறார்கள். அதேபோல் திருச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டைக்கும் எந்த குறையும் இல்லாமல் அமைச்சர்கள் ரகுபதியும், மெய்யநாதனும் பார்த்துக் கொள்கிறார்கள்.

Trichy Lok Sabha seat for whom? Muslim League Vs Congress? The approaching election! Exciting field!

இதனால் தான் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு கொடுக்க திமுக தலைமை தயங்குவதில்லை. சிட்டிங் எம்.பி. திருநாவுக்கரசர் மீண்டும் திருச்சியில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். இதனால் தான் இப்போது அடிக்கடி தொகுதிக்குள் வலம் வருகிறார். இதனிடையே திருநாவுகரசருக்கும் திருச்சி திமுக நிர்வாகிகளுக்கும் சரியான புரிதல் இல்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் திருநாவுக்கரசருடன் லோக்கல் அமைச்சர்களும் முரண்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் திருச்சி மக்களவைத் தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதியை கொடுக்கவும் திமுக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Trichy Lok Sabha seat for whom? Muslim League Vs Congress? The approaching election! Exciting field!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தவரை, திருச்சியை காட்டிலும் மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடவே அதிகம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+