அந்த மனசு தான் சார் கடவுள்.. ஏழ்மையிலும்.. அனாதையான குழந்தைகளை வளர்க்கும் மைதீன் பாட்ஷா தம்பதி
திருச்சி: பெயிண்டர் ஒருவர் குடும்பத்தில் நடந்த சிறிய சண்டையில், ஆத்திரப்பட்டு மனைவியை கொன்று சிறைக்கு போய்விட்டார். தாயை இழந்த 3 குழந்தைகளையும் வளர்க்க ஏழை தம்பதி முன்வந்துள்ளனர். போதிய வருமானம் இல்லாத நிலையிலும், அவர்களை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளை அவர்களுக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். எந்த சண்டையாக இருந்தாலும், அன்றைய நாளுக்குள் இருவரும் சமாதானம் ஆகிவிட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். இப்படி இருந்தால் குடும்பம் சொர்க்கமாக இருக்கும்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஒருவர் சண்டை போட்டால், துணையும் போட்டி போட்டு சண்டை போடுவர்.விட்டுக்கொடுத்து வாழ மன நிலை இல்லாத ஆண்கள் பலர் தங்கள் வன்முறையை பெண்கள் மீது காட்டுகிறார்கள். அப்படி காட்டப்படும் குடும்ப வன்முறையால் நிறைய கொலைகள் நடக்கின்றன. இல்லாவிட்டால் அவமானத்தில் பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
கொலைகள், தற்கொலைகள் நடக்கும் குடும்பங்களில் அவர்களின் குழந்தைகள் தாய்யை இழந்து, தந்தையை பிரிந்து அனுபவிக்கும் வலியை யாராலும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தாய் தந்தை பிரச்சனையால் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகள் எதிர்காலத்தையே தொலைத்து அநாதைகளாக வாழும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் காப்பங்களில் சேர்க்கப்பட்டாலும், இவர்களுக்கு சரியான மருந்தை எந்த காலத்திலும் யாராலும் போட்டுவிட முடியாது. குடிபோதையால் தான் இதுபோன்ற மோசமான வன்முறைகள் நடக்கின்றன என்பதே கசப்பான உண்மை.
குடிபழக்கம் மட்டும் ஒரு குடும்பத்தில் இல்லை என்றால், அந்த குடும்பமும் அவர்களின் சந்ததியும் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ முடியும். துரதிஷ்டவசமாக குடிபழக்கம் இங்கு நாளுக்கு நாள் மோசமாக அதிகரித்து வருகிறது. அந்த பக்கம் போக வேண்டாம். விஷயத்திற்கு வந்துவிடும்.
அண்மையில் திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்த சபுராபீவி என்ற நிஷா (வயது 35) என்ற பெண்ணை, அவரது கணவன் சதீஷ்குமார் தலையில் கல்லைப்போட்டு கொன்றுவிட்டார்.. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொன்றுவிட்டு சதீஷ்குமார் சிறைக்கு போய்விட்டார்.
சதீஷ்குமார் நிஷா தம்பதிக்கு 13 வயதில் சுவாதி என்ற மகளும், 11 வயதில் சந்தோஷ் என்ற மகனும், 7 வயதில் நிதிஷ்குரு என்ற மகனும் இருககிறார்கள். தாய் கொலை செய்யப்பட்டதாலும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அந்த தம்பதியின் 3 குழந்தைகளும் நிர்கதி ஆகி உள்ளார்கள்.
தாயை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் அந்த குழந்தைகளை வளர்த்து கரை சேர்க்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் 3 குழந்தைகளையும் நிஷாடிவின் அக்காள் அமீர்பீவியும், அவரது கணவர் மைதீன் பாட்ஷாவும் வளர்க்க முன்வந்துள்ளனர்.
அரியமங்கலம் காமராஜ்நகர் திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ஏழை தம்பதியான இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது உறவினரான பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்றுவிட்டார். அவர்களுடைய 4 குழந்தைகளையும் அமீர்பீவி-மைதீன் பாட்ஷா தான் வளர்த்து வருகிறார்கள். தற்போது இந்த தம்பதிதான் கொலை செய்யப்பட்ட சபுராபீவி என்ற நிஷாவின் 3 குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்கள்.
துவாக்குடி வாழவந்தான்கோட்டையில் மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்யும் மைதீன் பாட்ஷாவிற்கு ஒரு கண் மட்டுமே தெரியும். வாடகை வீட்டில் தான் வசித்து வரும் இவர், 3 குழந்தைகளையும் வளர்க்க முடிவு செய்துள்ளார். அவர்களுடைய குழந்தைகள் 2 பேர், ஏற்கனவேஅவர்கள் வளர்த்து வரும் 4 குழந்தைகள் என கிட்டத்தட்ட இப்போது 9 குழந்தைகளை இந்த தம்பதி வளர்க்கிறார்கள். இவர்களுக்கு அரசு மற்றும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவ வேண்டும் என்று கோரியுள்ளனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications