எப்ப பார்த்தாலும் ஆபாச படம்தான்.. அதிர வைக்கும் அல்போன்ஸ்.. திருச்சியிலிருந்து பரபர தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக தமிழகத்தில் முதல் கைது

    திருச்சி: எப்ப பார்த்தாலும் ஆபாச வீடியோ பார்த்து கொண்டே இருப்பாராம் அல்போன்ஸ்.. அதனால்தான் போலீசில் எளிதாக சிக்கி உள்ளார் என்று அல்போன்ஸ் கைது பின்னணி குறித்து சொல்லப்படுகிறது.

    நாடு முழுவதும் சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இதனை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

    தமிழகத்திலும், ''குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்.

     பாலியல் குற்றம்

    பாலியல் குற்றம்

    இப்படி செய்பவர்களுக்கு 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று காவல்துறை எச்சரித்திருந்தது. அதேபோல, பாலியல் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் போலீசாருடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக ஏராளமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

     ஐடிஐ

    ஐடிஐ

    இவ்வளவு செய்தும், கிறிஸ்டோபர் அல்போன்ஸ் சிக்கி உள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர்.. ஐடிஐ படித்து விட்டு ஏசி மெக்கானிக்காக நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். எப்ப பார்த்தாலும் சோஷியல் மீடியாவில்தான் இருப்பார்.

     முதல் ஆள்

    முதல் ஆள்

    குறிப்பாக குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்வது, அதை நண்பர்களுக்கு ஷேர் செய்வது என்றே அல்போன்ஸ் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அதனால்தான் போலீஸ் கண்ணில் முதல் ஆளாக பட்டுள்ளார். இதனால், திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் இவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

     வீடியோக்கள்

    வீடியோக்கள்

    கிறிஸ்டோபர் பெரும்பாலும், தன்னுடைய அடையாளத்தை மறைக்க நிறைய புனை பெயர்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதாவது, நிலவன், ஆதவன், வளவன்.. இந்த பெயர்களில்தான் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார். பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியும் உள்ளார்

    கைது

    கைது

    இதனிடையே, சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் மனுவினை அளித்தார். இந்த சமயத்தில் நாகர்கோயிலில் இருந்து அல்போன்ஸ் திருச்சி வரவும், கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர்.

     விசாரணை

    விசாரணை

    அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார். கிறிஸ்டோபரின் செல்ஃபோனை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கும் போலீசார் அனுப்பியுள்ளனர். இப்போது இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

     ஏடிஜிபி ரவி

    ஏடிஜிபி ரவி

    இந்த கைது குறித்து கூடுதல் டிஜிபி ரவி சொல்லும்போது, "பல போலி பெயர்களில் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்டோபர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அதனால் தொடர்ந்து தனிகுழு மூலம் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.. இதன்பிறகுதான் அவரை கைது செய்துள்ளோம்.. ஆனால் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம்.. அதேபோல, தெரியாமல் ஆபாச படங்களை பார்த்தவர்களும் பயப்பட வேண்டாம்.. ஆனால், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, டவுன்லோடு செய்தாலோ, ஷேர் செய்தாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாயும்" என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+