ஏற்கனவே வாய்க்கா தகராறு.. ஸ்டேஷனில் முத்தமிட்டு சிக்கிய எஸ்ஐ இன்னொரு பெண்ணுடன் ஓட்டம்?
Recommended Video

திருச்சி: திருச்சியில் பெண் போலீஸை முத்தமிட்ட வழக்கில் தேடப்படும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இன்னொரு பெண்ணுடன் ராஜபாளையத்துக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து போலீஸார் அவரை பிடிக்க ராஜபாளையத்துக்கு விரைந்துள்ளனர்.
திருச்சி அருகே சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி இரவு பணியில் இருந்த பெண் போலீஸ் (32) ஒருவரை அங்கு பணியாற்றும் எஸ்ஐ பாலசுப்பிரமணியன் (54) கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.
இந்நிலையில் பாலசுப்பிரமணியன் மீது அந்த பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த எஸ்ஐ பாலசுப்பிரமணியனை போலீஸ் எஸ்பி பணிநீக்கம் செய்தார். இந்தநிலையில் பெண் போலீஸுக்கு முத்தம் கொடுத்த காட்சி சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

போலீஸில் வழக்கு
இதையடுத்து இரு தரப்பிலும் விசாரணை செய்த டிஎஸ்பி, எஸ்பியிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி பெண் போலீஸை பணி செய்யவிடாமல் தடுத்தது, பாலியல் தொந்தரவு கொடுத்தது, மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின் கீழ் பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

37 வயது பெண்ணுடன் பழக்கம்
இந்நிலையில் தன்னை எப்படியும் கைது செய்துவிடுவர் என்பதால் எஸ்ஐ பாலசுப்பிரமணியன் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டார். பாலசுப்பிரமணியனின் சொந்த ஊர் திருமலை அருகே கொடாப்பு ஆகும். அங்கு அவருக்கு மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 37 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

தகவல்கள்
37 வயது பெண்ணும், எஸ்ஐ பாலசுப்பிரமணியனும் காணவில்லை என அவர்களது உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணையில் பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணை அழைத்து கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜபாளையம்
இதையடுத்து அவரை பிடிக்க சோமரசம்பேட்டை போலீஸார் ராஜபாளையத்துக்கு சென்றனர். கடந்த 3 நாட்களாக அந்த பெண்ணுடன் எஸ்ஐ தலைமறைவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications