என் வீட்டின் மீதான தாக்குதலால் மிகுந்த மனவேதனை.. என்னை விட கட்சிதான் முக்கியம்.. திருச்சி எம்பி சிவா

என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனை கொடுக்கிறது- திருச்சி சிவா எம்பி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை கொடுக்கிறது என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது.

இதனால் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் திருச்சி சிவாவை விழாவுக்கு அழைக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அமைச்சர் நேருவின் காரை மறித்து கருப்பு கொடியை காட்டி நேருவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

திருச்சி சிவா

திருச்சி சிவா

இதையடுத்து விழா நடந்த அதே தெருவில் திருச்சி சிவா வீடு இருக்கிறது. அந்த வழியாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிய அமைச்சர் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்தது. மேலும் போர்டிகோவில் வைக்கப்பட்டிருந்த சேர்களை உடைத்தனர்.

சிவா வீட்டின் மீது தாக்குதல்

சிவா வீட்டின் மீது தாக்குதல்

திருச்சி சிவா வீட்டின் மீதான தாக்குதல், அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய சம்பவம் ஆகியவற்றில் இரு தரப்பினரையும் சேர்ந்த ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நேற்றைய தினம் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பெண் போலீஸ் சாந்திக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

 அமைச்சர் நேரு

அமைச்சர் நேரு

இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர் திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அமைச்சர் நேருவின் வலதுகரங்களான காஜாமலை விஜய், துரைராஜ், நேருவின் ஆதரவாளர்களான முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகிய 4 பேர் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதன்மை செயலாளர் நேரு

முதன்மை செயலாளர் நேரு

திமுக முதன்மை செயலாளராக இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவுக்கே இந்த நிலை என்பதால் மற்ற அமைச்சர்கள் திமுக தலைமை நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் பஹ்ரைனுக்கு சென்றிருந்த திருச்சி எம்பி சிவா தமிழகம் வந்தார். அவர் திருச்சி விமான நிலையத்தில் கூறுகையில் நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும் சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை.

சோதனைகள்

சோதனைகள்

கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னைவிட என் கட்சி முக்கியம் என்பதால் பலவற்றை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவம் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனை தந்துள்ளது.

வீட்டில் உதவியாளர்களிடம் பேச வேண்டும்

வீட்டில் உதவியாளர்களிடம் பேச வேண்டும்

வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்போது எதையும் பேசும் மன நிலையில் இல்லை என்றார். நீண்டகாலமாக அமைச்சர் நேருவுக்கும் திருச்சி சிவாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் திருச்சி சிவா என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+