முதலில் அண்ணாமலை..இப்போது அன்புமணி.. திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
திருச்சி: திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பாரிவேந்தருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
திருச்சியில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல் காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தமிழக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்த நட்சத்திர ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்ச முத்து என்கிற பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார் இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் குத்தகை பணம் செலுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின்னர் ஹோட்டலை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. தொடர்ந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்சியினரை உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதனிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்ஆர்எம் குழுமம், தற்போது ஹோட்டலில் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி உள்ளதகாவும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர். மேலும் உடனடியாக ஹோட்டலை காலி செய்ய முடியாது. கால அவகாசம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும் இன்று வரை தான் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாரிவேந்தருக்கு ஆதரவாக அதன் கூட்டணி கட்சி தலைவர்களான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "திருச்சியில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் குத்தகை அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
திருச்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான உணவு விடுதியை எஸ்.ஆர்.எம் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி வருகிறது. தமிழக அரசின் குத்தகை நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதி நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தும் குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அதை தமிழக அரசு மூட நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் புதல்வரை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் போட்டியிட்டது தான் அரசின் முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை அரசியல் பழிவாங்கும் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பழிவாங்கும் செயல்கள் கூடாது. ஒரு புறம் சுற்றுலா வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று பேசிக் கொண்டு, இன்னொரு புறம் சுற்றுலா வளர்ச்சிக்காக செயல்படும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட நினைப்பது சரியான செயலல்ல.
அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும்; வணிகத்தை வணிகமாக பார்க்க வேண்டும். எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடவோ, இடிக்கவோ அரசு முயற்சி செய்யக் கூடாது. குத்தகை விதிகளுக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தொடர்ந்து நடத்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை அரசு அனுமதிக்க வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக திமுக அரசைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காகப், பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான இடத்தை, 1994ஆம் ஆண்டு முறையாக குத்தகை பெற்று, சுமார் 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வரும் எஸ்.ஆர்.எம்.குழுமத்தினை, உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. எஸ்.ஆர்.எம்.
குழுமத்தால் கட்டப்பட்ட ஹோட்டல் கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பை இடிக்கத் திட்டமிட்டுள்ளதா திமுக அரசு? எஸ்.ஆர்.எம். நிறுவனம், குத்தகைக் காலத்தை நீட்டிக்கக் கோரி மூன்று முறை மனு அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறது திமுக அரசு. எனவே இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.குழுமம் நீதிமன்றத்திடம் முறையிட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கையில், திமுக அரசு உள்நோக்கத்தோடு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
திமுக ஆட்சியில், அதன் நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவது வாடிக்கையானது. காலாகாலமாக, நில ஆக்கிரமிப்புகளும், கட்டப்பஞ்சாயத்தும், அத்துமீறல்களும், திமுக ஆட்சியின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகின்றன. ஆட்சி அதிகாரத் திமிரில், அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களைப் பழிவாங்குவது திமுகவுக்கு வழக்கமானது.
விஜயகாந்த மண்டபம் இடிப்பு: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் மண்டபத்தை இடித்துப் பழி தீர்த்துக் கொண்ட திமுக, இன்றும் திருந்தவில்லை என்பதே தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலைக் கைப்பற்ற நடக்கும் முயற்சி நிரூபிக்கிறது.
கடந்த 2006 - 2011 ஆட்சிக் காலத்தில், இது போன்ற அராஜகச் செயல்பாடுகளால்தான், திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் தூக்கி எறிந்தார்கள் என்பது சிறிதேனும் நினைவில் இருக்குமேயானால், பொதுமக்களின் வாக்குகள் மீது பயம் இருக்குமேயானால், மீண்டும் அதே போன்ற அநியாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் மூன்று ஆண்டு கால இருண்ட ஆட்சியால், மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்ததால், முடிந்த வரை குடும்பத்துக்காகச் சுருட்டுவோம் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படும் திமுக, திருந்த வாய்ப்பே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
சாமானிய பொதுமக்கள், நீதிமன்றம் மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல நடந்து கொள்ளும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கு நிலுவையில் இருக்கையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications