அண்ணாமலையை வரவேற்க காத்திருந்த திருச்சி சூர்யா.. திடீரென போலீஸ் செய்த சம்பவம்.. நொந்துபோய் பதிவு
திருச்சி: தமிழ்நாடு போலீஸார் ஸ்காட்லாந்து போலீஸாருக்கு நிகரானவர்கள்' என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழ்நாடு காவல் துறையை வெகுவாக பாராட்டுகிறேன் என்று பாஜக ஓ.பி.சி. அணியின் மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் வெளியாகி பெரும் பரபரப்பு எழுந்தது. இந்த ஆடியோவில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசியதால் பாஜகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார்.

இதனிடையே , திருச்சி சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவியது. இது உண்மையா என்பது தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த நவம்பர் 2ம் தேதி அறிவித்தார், ஓ.பி.சி. அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் மீண்டும் தொடரவும் திருச்சி சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார்.
அதனை ஏற்றுக்கொண்ட திருச்சி சூர்யா சிவா அன்று மாலையே வெளியிட்ட பதிவில், "கடமை, கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக, கட்டுப்பாட்டு என்ற சொல்லின் பொருள் விளங்க அரசியல் போர் தொடுத்து, தொண்டர்கள் அனைவரையும் அரவணைப்பது போல மீண்டும் என்னை அரவணைத்து ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கும், அண்ணன் கேசவ விநாகம் அவர்களுக்கும் எனக்கு தோள் கொடுத்து நின்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 43 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தடுப்பதற்கு முடியவில்லை.
— Trichy Suriya Shiva (@TrichySuriyaBJP) November 8, 2023
கோயம்புத்தூரில் ஐ.எஸ்.ஐ வைத்த வெடிகுண்டைத் தடுக்க முடியவில்லை.
ஆனால், அண்ணன் அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்ளும் ஸ்ரீரங்கம் நிகழ்ச்சியில் வரவேற்பதற்கு வைத்திருந்த தீபாவளி பட்டாசு வெடிகளை தமிழ்நாடு… pic.twitter.com/VsDFKuyVEy
பாரதத்தாயின் முதல் மகன், தாய்நாட்டின் தலைமகன், பாரதத்தின் நிரந்தர பிரதமர் மாண்புமிகு மோடி ஜி அவர்களின் கனவினை நனவாக்க, அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்பதை இந்த தருணத்தில் என் உறுதி மொழியாகவே அளிக்கிறேன். " என்று ட்விட்டரில் திருச்சி சூர்யா சிவா கூறியிருந்தார்.
அதன்பிறகு தினமும் பாஜகவில் ஆக்டிவாக இருக்கும் திருச்சி சூர்யா சிவா , தான் மீண்டும் பாஜகவில் ஓ.பி.சி. அணியின் மாநில செயலாளர் பொறுப்பேற்ற பின்னர், என் மண் என் மக்கள் யாத்திரைக்காக திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வரும் அண்ணாமலை வரவேற்க பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்திருந்தாக கூறப்படுகிறது.. இந்நிலையில் அண்ணாமலையை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த தீபாவளி பட்டாசுகளை காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டதாம்.. இதனால் கோபம் அடைந்துள்ளார் திருச்சி சூர்யா சிவா..
இது தொடர்பாக எக்ஸ் (டுவிட்டர்)) தளத்தில் பதிவு ஒன்றை திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ளார்.. "தமிழ்நாட்டில் 43 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தடுப்பதற்கு முடியவில்லை. கோயம்புத்தூரில் ஐ.எஸ்.ஐ வைத்த வெடிகுண்டைத் தடுக்க முடியவில்லை. ஆனால், அண்ணன் அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்ளும் ஸ்ரீரங்கம் நிகழ்ச்சியில் வரவேற்பதற்கு வைத்திருந்த தீபாவளி பட்டாசு வெடிகளை தமிழ்நாடு காவல்துறை தடுத்திருக்கிறது. தமிழ்நாடு போலீஸார் ஸ்காட்லாந்து போலீஸாருக்கு நிகரானவர்கள்' என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழ்நாடு காவல் துறையை வெகுவாக பாராட்டுகிறேன்." என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications