திருச்சியில் ஆம்புலன்ஸை நொறுக்கி.. எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி: திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிசாமி பேச இருந்த இடத்துக்கு வந்த ஆம்புலன்சை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள் டிரைவர் மற்றும் பெண் உதவியாளரை தாக்கியதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் இன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இது அதிமுகவுக்குள் பரபரப்பை தந்து வருகிறது.
வேலூரில் கடந்த 18ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியபோது 108 ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்துள்ளது..

108 ஆம்புலன்ஸ்
அதனை திட்டமிட்டு திமுக இதுபோன்ற அதிமுக கூட்டங்களில் போது நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுப்புவதாக எடப்பாடி குற்றம் சாட்டியிருந்தார்... மேலும், 108 ஆம்புலன்ஸ் டிரைவரை அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது... இதையடுத்து, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் தரப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி இச்செயலுக்கு பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் , முதலமைச்சர் துணை முதலமைச்சர் என யாருடைய கூட்டமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வரத்தான் செய்யும். எனவே இனி 108 ஆம்புலன்ஸ்க்கு இடையூறு இல்லாமல் கூட்டங்களை எந்த கட்சியாக இருந்தாலும் நடத்த வேண்டும்:" என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருச்சி துறையூரில் நடைபெற்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்னையில் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்..
இன்று ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தொமுச பேரவை செயற்குழு உறுப்பினருமான இருளாண்டி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் கூறியிருப்பதாவது:
அயராது மக்கள் சேவை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 18ம் தேதி வேலூர் மாவட்ட பிரசாரத்தின் போது நோயாளியை ஏற்றுவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு, எனது பிரசாரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வரும் டிரைவர், அதே ஆம்புலன்சில் நோயாளியாக செல்ல வேண்டி வரும் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் அங்கு கூடி இருந்த தொண்டர்கள் ஓட்டுநரையும் மற்றும் ஆம்புலன்சையும் தாக்கினர்.
மயங்கி விழுந்த தொண்டர்
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் துறையூருக்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததாக 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் பேரில் துறையூர் பயர் ஸ்டேஷனில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இடையே 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்தவர் விரைவாக வாருங்கள் நோயாளி கவலைக்கிடமாக உள்ளார் என மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து கொண்டு இருந்தார்.
அந்த இடத்தின் அருகே சென்றபோது ஆம்புலன்சை மறித்து அதிமுகவினர் கைகளால் குத்தி சேதப்படுத்தியதுடன், டிரைவர், பெண் உதவியாளரை தாக்கி உள்ளனர், இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொமுச வன்மையாக கண்டிக்கிறோம். எனவே தாக்கியவர்கள் மீதும், அதை தூண்டும் விதமாக பதட்டமான சூழ்நிலை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமி மீதும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொமுச சங்க தலைமையில் அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று(26ம் தேதி) மதியம் 12 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று அறிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications