சல்லி சல்லியா நொறுக்கி.. திருச்சி துவாக்குடி டோல்கேட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள்! கொந்தளிப்பு!
திருச்சி: திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் இன்று மனிதநேய மக்கள் கட்சியினர் நடத்திய சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் சுங்கச்சாவடி கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. டோல்கேட் சூறையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காலாவதியான சுங்கச் சாவடிகளை உடனடியாக மூட வேண்டும், தமிழ்நாட்டில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்பட வேண்டும், புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கக்கூடாது, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய 7 சுங்கச்சாவடிகளில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பரனூர் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் காரணமாக இந்த வழியாக சென்ற வாகனங்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல, திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் ம.ம.க எம்.எல்.ஏ அப்துல் சமது தலைமையில் சுமார் 700க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய மக்கள் கட்சியினர் சுங்க சாவடி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து கற்களை வீசி தாக்கியும், கையில் கிடைத்ததை வைத்தும் அங்குள்ள கண்ணாடிகள், சிசிடிவி கேமராக்கள், தடுப்புகளை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கட்சிநிர்வாகிகளும் போலீசாரும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 400க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை கனியூர் பகுதியிலும், மதுரை கப்பலூர் சுங்க சாவடி உள்ளிட்ட சுங்கச் சாவடியிலும் மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications