பொட்டியை திறந்ததும் கேஎன் நேருவுக்கு ஷாக்! போக போக மாறிய ரிசல்ட்! டஃப் கொடுத்த ராமமூர்த்தி
திருச்சி: திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல்கட்டத்திலேயே பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கேஎன் நேரு பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.
முதற்கட்டமாக எண்ணப்பட்ட வாக்குகளில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஜி ராமமூத்தி முன்னிலை பெற்று நிலையில், தற்போது கிடைத்த தகவல்களின் படி, கேஎன் நேரு அவரை விட சுமார் 4,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதி பாரம்பரியமாக திமுக-அதிமுக கட்சிகளுக்கு இடையிலான நேரடி போட்டி நடைபெறும் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற கே.என்.நேரு மீண்டும் களமிறங்கியிருப்பதால், அவரின் வெற்றி ஹாட்ரிக் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், இந்த முறை அரசியல் களத்தை மாற்றும் வகையில் புதிய சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியது. அதன் தாக்கம் தபால் வாக்குகளிலேயே பிரதிபலிக்கத் தொடங்கியது. குறிப்பாக அரசு ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் அதிகமாக பதிவு செய்யும் தபால் வாக்குகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் கவனிக்கத்தக்கதாகது.
திருச்சி மேற்கு தொகுதியில் மொத்தம் 1.94 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்த முறை சுமார் 81.32 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும். அதிக வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளதால், இறுதி முடிவு எப்படி மாறும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
காலை தொடக்கத்தில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலையில் இருந்துவந்தார். சில சுற்றுகளுக்குப் பின்னர் கே.என். நேரு முன்னிலை வகிக்க தொடங்கினார். இந்த நிலையில், 24 சுற்றுகள் முடிவில் 4,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் கே.என். நேரு வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் ராமமூர்த்தி இரண்டாமிடமும், அமமுக ராஜேந்திரன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications