எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டு.. ஆஸ்பத்திரியில் தானே அட்மிட் ஆன பெண் போலீஸ்.. பரிதாப மரணம்

எலி பேஸ்ட்டை சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டுவிட்டாட்ர பெண் போலீஸ் பவானி.. கடைசியில் எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சோக சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி ஸ்டேஷனில் வேலை பார்த்து வந்தவர் பவானி.. 35 வயதாகிறது.. 2009-முதல் போலீஸாக வேலை பார்த்து வருகிறார்.

 trichy woman police dies after eating rat paste

இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. கணவன் பெயர் மணிவண்ணன். ஆனால் 6 மாசத்திலேயே கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.. அதனால் இந்த 10 வருஷமாக தனியாகதான் வாழ்ந்து வந்தார்.. இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

கடந்த ஞாயிற்றுக்கழமை, வேலை விஷயமாக கோவை வரை டூவீலரில் சென்றுள்ளார்.. ஆனால் மயங்கிய நிலையில் திருச்செங்கோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அவராகவே ஆஸ்பத்திரிக்கு சென்று தான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக சொல்லி உள்ளார்.. இந்த விஷயம் அவரது வீட்டுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தகவலறிந்து பவானியின் சகோதரி விரைந்து வந்து, ஆம்புலன்ஸ் வைத்து மணப்பாறை அரசு ஆஸபத்திரியில் அனுமதித்தார்.. ஆனால் டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் பவானியை காப்பாற்ற முடியவில்லை. இந்த தற்கொலை குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பவானியிடம் நிறைய பேர் கடன் வாங்கி இருந்தார்களாம்.. தோழிகளை நம்பி நிறைய காசு கடனாக தந்து உதவியிருக்கிறார்.. அந்த பணத்தை அவர்கள் யாருமே திருப்பி தரவில்லையாம்.. அந்த சோகத்தில் இருந்திருக்கிறார் பவானி என்கிறார்கள். கடனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் தற்கொலை செய்து வரும் நிலையில், கொடுத்த காசை வாங்க முடியாமல் பவானி ஒரு போலீஸே உயிரிழந்தது அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+