எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ
இளைஞரை கட்டி உதைத்து சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
திருச்சி: "இவனுங்க ரேப் பண்ணுவாங்களாம்.. அதை பெத்தவங்களும், கூட பொறந்தவங்களும் பாக்கணுமா?" என்று கேட்டு இளைஞரை கட்டி போட்டு உதைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அது ஒரு வீட்டின் அறை போல இருக்கிறது. அந்த ரூமில்தான் 20 வயது மதிப்புடைய இளைஞர் தரையில் விழுந்து கிடக்கிறார். அவரது கைகள், பின் பக்கமாக கட்டப்பட்டுள்ளது. கால்களும் இறுக்கி கட்டப்பட்டுள்ளன.
எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. என்று அலறுகிறார் இளைஞர். வீடியோவில், சிறுமி முதல், வயதில் மூத்த பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் செல்பி காட்சிகள் உள்ளன. இன்னொரு வீடியோவில், உடம்பு, முகம் என எல்லா இடங்களிலும் ரத்த காயங்கள். இவரை நன்றாக அடித்து உதைத்துள்ளனர்.

கெஞ்சுகிறார்
மற்றொரு வீடியோவில், சிறுமி முதல், வயதில் மூத்த பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் செல்பி காட்சிகள் உள்ளன. இன்னொரு வீடியோவில், கட்டுக்கள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவரது துணிகள் கிழிந்து தொங்குகின்றன. விட்டுவிடுமாறு அங்கிருப்பவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறார்.

எச்சரிக்கை குரல்
தலை உள்ளிட்ட பாகங்களில் ரத்தம் வழிகிறது.. அவனை "இவனுங்க ரேப் பண்ணுவாங்களாம்.. அதை பெத்தவங்களும், கூட பொறந்தவங்களும் பாக்கணுமா?" என்று கண்டிப்புடன் எச்சரிக்கிறது.

பாட்டி குரல்
"தலையை அறுத்து கொன்னுடுவேன்.." என்ற குரலும், "வேணாம்டா.. அப்படியெல்லாம் செய்யாதே" என்ற ஒரு பாட்டியின் குரலும் கேட்கிறது.

பீமநகர் மணி
உயிர் பிச்சை கேட்டு கதறும் நபர் திருச்சி பீமநகரை சேர்ந்த மணி என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இப்போது அவர் எங்கே, எப்படி இருக்கிறார் என தெரியவில்லை. இது சம்பந்தமாக எந்த புகாரும் வரவில்லை என பாலக்கரை போலீசார் கூறியுள்ளனர்.

உண்மை தன்மை
ஆனால் இந்த இளைஞர் எந்த பெண்களை சீரழித்தார்? இவரை கட்டிப்போட்டு அடித்தவர்கள் யார்? என்ற விவரம் எல்லாம் தெரியவில்லை. தன் வீட்டு பெண்ணிடம் இந்த இளைஞர் பழகி ஏமாற்றியதை அறிந்து சம்பந்தப்பட்டவர்களே அடித்து நொறுக்கி இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. எனவே இந்த விஷயத்தில் காவல் துறையினர்தான் உண்மை தன்மையை வெளியே கொண்டு வர வேண்டும்! இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications