துபாய் வேலைக்கு நண்பனை வழியனுப்ப சென்ற இளைஞர்கள்.. திருச்சி சாலையில் நடந்த கொடூரம்.. இப்படியும் நடக்குமா?
திருச்சி: திருச்சி (Trichy) மாவட்டம் லால்குடி அருகே துபாய்க்கு வேலைக்கு செல்லும் நண்பனை வழியனுப்புவதற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நண்பனை வழியனுப்பி வைப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தேர்முட்டி பகுதியை சேர்ந்தவர் காந்தியின் மகன் சந்தோஷ். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். சமீப நாட்களாக துபாய்க்கு வேலைக்கு செல்ல சந்தோஷ் முயற்சித்து வந்தார். இந்த நிலையில அவருக்கு துபாயில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து துபாய் செல்வதற்காக நேற்று சந்தோஷ் திருச்சி விமான நிலையம் புறப்பட்டுள்ளார்.

காரில் புறப்பட்ட நண்பர்கள்
சந்தோஷ் தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார். அப்போது அவரது நண்பர்கள் பலரும் வழியனுப்பி வைப்பதற்காக மற்றொரு காரில் சென்றனர். நண்பர்களான லால்குடியைச் சேர்ந்த ரஹீம் மகன் சாதிக் பாட்ஷா (19), லால்குடி நகராட்சி திமுக கவுன்சிலர் முஸ்தபா மகன் சமீர் (22), நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் அரவிந்த் (20) உள்பட 12 பேர் மற்றொரு காரில் புறப்பட்டு இருக்கிறார்கள்.
இதில், சாதிக் பாட்ஷா, அரவிந்த் லால்குடியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். காரை சமீர் ஓட்டி வந்தார். லால்குடி - திருச்சி சாலையில் மாந்துறை தனியார் கல்வியியல் கல்லூரி அருகே சென்றது. அப்போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்வதற்காக காரை சமீர் வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
3 பேர் உயிரிழப்பு
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டிருந்த நகர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி விசுவநாதன் (56) தூக்கி வீசப்பட்டு காரோடு இழுத்து செல்லப்பட்டார். இதனால் காரும் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று சாலையில் உருண்டு தலைகீழாக கவிழ்ந்தது. சினிமா திரைப்படங்களில் ஏற்படுவது போல் கார் 4 முறை உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் விசுவநாதன் உயிரிழந்தார்.
இதேபோல் காரில் இருந்த கல்லூரி மாணவர்கள் அரவிந்த் மற்றும் சாதிக் பாட்ஷா இருவரும் உயிரிழந்தனர். காரில் இருந்த பலரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களை வழியனுப்ப சென்ற இளைஞர்களுக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications