என்னங்க இது.. ஒரே எண்ணில் 2 பேருக்கு பான் கார்டு.. அதிரும் திருச்சி!!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே இருவரது பான் கார்டு எண்கள் ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்துள்ளதால், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அலுவலர். இவரது மகன் செந்தில்குமார் (45).

Two persons get same Pan number near Trichy

தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

இவர், வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, பான் கார்டு எண்ணானது வேறு ஒரு முகவரியில் இருப்பதாக காட்டுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரி, இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, பான் கார்டை ஆய்வு செய்தபோது கணினியில் வந்த முகவரியை செந்தில்குமாரிடம் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் செந்தில்குமார், கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+