விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக்
திருச்சி: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருச்சியில் பிரச்சாரம் செய்த உதயநிதி, திமுக வேட்பாளர் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்ய மாட்டார் என்றும் விஜய் வெறும் அட்டை காற்றடித்தால் பறந்துவிடுவார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சில அறிவாளிகள் கேட்கிறார்கள். இது கூட தெரியாத தற்குறி கூட்டத்திடம் என்ன கேட்பது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஒரு தொகுதி தான் என்பதை தற்குறி கூட்டத்திடம் எப்படி புரிய வைப்பது. கொரோனா லாக்டவுன் போல சிலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

திருச்சி கிழக்கில் பிரச்சாரம்
நாம் அவர்களை போல பிரேக் விட்டு பிரேக் விட்டு பிரச்சாரம் செய்யவில்லை. சிலர் இன்று ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகிவிட்டனர். நாம் ரெஸ்ட் இல்லாமல் தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம். சோர்வடையாமல் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். உலகமே கொரோனா லாக்டவுனில் முடங்கியிருந்தது. அப்போது கூட திமுகவினர் மக்களுக்கு என்ன தேவையோ அதை களத்தில் இறங்கி செய்தோம்.
இனிகோ இருதயராஜ் ஒரு தொகுதியில் மட்டும் தான் வேட்பாளராக இருக்கிறார். இனிகோவுக்கு தமிழ்நாடு முழுவதும் நண்பர்கள் உள்ளனர். சென்னையில் நண்பர்கள் உள்ளனர். அங்கேயும் அவர் பல தொகுதிகளில் நிற்பதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் சிலர் இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துள்ளனர். அப்படியில்லாமல் 2 கால்களையும் திருச்சி கிழக்கில் தான் வலுவாக வைத்துள்ளார்.
புறக்கணிக்க வேண்டும்
இங்கு நின்று வெற்றி பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளார். ஒரு இடத்தில் நின்றாலே வெற்றியை தேடி தருவீர்கள் என்று அவருக்கு தெரியும். உங்கள் மீதுள்ள நம்பிக்கையில், தைரியத்தில் நிற்கிறார். தற்குறிகளிடம் என்ன பேசுவது. நீ கத்தறதை கத்து, நான் உழைப்பதை உழைப்பேன் என்று சொல்லிவேலையை பார்ப்போம். மக்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இனிகோ இருதயராஜை வெற்றி பெற வைத்தால் அவர்கள் உங்கள் வீடு தேடி வருவார். அவருக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் எல்லாம் தெரியாது. உங்கள் வீடு சுக துக்கம் நிகழ்வுகளில் கலந்துகொள்வார். உங்களை அவர் வீட்டிற்கு வர சொல்ல மாட்டார். இந்த காரியத்தை அவர் செய்ய மாட்டார். உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருப்பார். திருவிழாக்களுக்கு அட்டை மூலம் போடும் செட் தான் அந்த கூட்டம்.
அட்டை கத்தி
அதை அட்டை என 4 மாதங்களுக்க முன்பே சொல்லிவிட்டேன். அது அட்டை தான் என்று களத்தில் நிரூபணமாகிவிட்டது. காற்றடித்தால் பறந்துவிடும். திருவிழா முடிந்ததும் செட்களை கழற்றுவது போல, அவர்களும் தேர்தல் முடிந்தவுடன் இங்கிருந்து காணாமல் போய்விடுவார்கள். திருச்சி கிழக்கு முட்டாள் தொகுதி இல்லை. அறிவாளி மக்கள் வசிக்கும் தொகுதி என்பதை காட்ட வேண்டும்"
-
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications