திருச்சியின் தெருவில் வணக்கம் வச்சுட்டே நடந்து போறது யார் பாருங்க! டீக்கடையில் KN நேருவின் சர்ப்ரைஸ்
திருச்சி: "கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தராத திமுகவுக்கா உங்கள் வாக்கு?" என்று திருச்சியில் நடைபெற்ற தவெகவின் முதல் பிரச்சாரத்தில் அதன் தலைவர் விஜய் எழுப்பிய கேள்வியின் தாக்கம் இன்னும் அங்கு குறையவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், திமுக மூத்த தலைவர் கேஎன் நேருவின் புதிய அணுகுமுறை அத்தொகுதியின் கவனத்தை பெற்று வருகிறது. அங்கே என்ன நடந்தது தெரியுமா?
திமுக முதன்மை செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாள் என்றாலே திருச்சியில் களைகட்டிவிடும்.. அந்தவகையில் நாளை நேருவின் பிறந்தநாளாகும்..

ஆனாலும், சமீபகாலமாகவே கேஎன் நேரு அப்செட்டாக உள்ளாராம். நகராட்சி துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை திரும்பத் திரும்ப நடவடிக்கை எடுக்க சொல்லி தமிழக டிஜிபிக்கு ஒருபுறம் கடிதம் எழுதி வருகிறது..
பிரம்மாண்ட பிறந்தநாள் கொண்டாட்டம்
அமலாக்கத்துறை போட்டுள்ள இந்த ஊழல் வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முறை பிரம்மாண்டமான பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று நிர்வாகிகளிடம் சொன்னாராம் நேரு.
ஆனாலும், திருச்சி திமுகவினர், ஃபிளெக்ஸ்கள், பேனர்களை திருச்சி முழுவதும் வைத்து தங்களது விசுவாசத்தை காட்டி வருகிறார்களாம். இதில் "அருண் நேரு பாசறை" என்ற பெயரில் அவரது விசுவாசிகள் வைத்திருக்கும் பேனர்கள், திருச்சி மக்களின் மொத்த பேர் கவனத்தையும் திருப்பி வருகிறதாம்.
இதனிடையே, தொகுதிக்குள் தன்னுடைய மக்களை சந்திக்கும் படலத்தை கே.என்.நேரு ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள்.
உறையூர் மணமகள்
அதாவது, நேற்றிரவு 7 மணிக்கு, உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகே நடைபெற்ற திமுக மூத்த நிர்வாகியின் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள காரில் வந்திருந்தார் நேரு.. மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வந்து மீண்டும் காரில் ஏறி வீட்டுக்கு செல்வார் என்று பார்த்தால், தன்னுடைய காரையும் எஸ்கார்டு வாகனத்தையும் வீட்டுக்கு புறப்பட சொல்லவிட்டாராம்.
இதனால் குழம்பி போன அவர்களும், தங்கள் வாகனங்களை எடுத்து கொண்டு கிளம்பி சென்றுவிட்டனர். அதற்கு பிறகு நேரு, பஞ்சவர்ண சுவாமி கோவில் ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.. பிறகு, தில்லை நகரில் உள்ள ரோட்டோர டீக்கடைக்குள் புகுந்த நேரு அங்கே ஒரு சேரில் உட்கார்ந்து, டீ குடித்தார்...
ரோட்டில் இறங்கி நடந்த கேஎன் நேரு
தில்லைநகர் ரோட்டில் நேரு நடந்து செல்வதையும், டீக்கடையில் டீ குடிப்பதையும் பார்த்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபடி சென்றனர்.. சிலர் நேருவுக்கு வணக்கம் வைத்தபடி சென்றனர்.. சிலர் நேருவின் அருகில் வந்து நலம் விசாரித்தனர்.. அவர்களிடம் பதிலுக்கு நலன் விசாரித்த நேரு, குறைகளை கேட்டறிந்தார்..
பஞ்சவர்ண சுவாமி கோவில் ரோட்டில் இருந்து தன்னுடைய வீடு வரை அதாவது கிட்டத்தட்ட 2 கிமீ தூரத்துக்கு நேரு நடந்தே சென்றார்.. வீடு வரை தனக்கு வணக்கம் வைத்தவர்களுக்கெல்லாம் சளைக்காமல் பதில் வணக்கத்தை புன்னகையுடன் வைத்ததையும் மக்கள் கவனித்து கொண்டேயிருந்தனர்.
தவெக - ரகசிய ரிப்போர்ட்
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், திருச்சி திமுக உட்பட தமிழகமெங்கும் களப்பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
இதனிடையே, தவெக எடுத்த ரகசிய சர்வேயில், திருச்சி கிழக்கு தொகுதியில்தான், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு வரும் என்று ரிப்போர்ட் வந்துள்ளதாம்..
காரணம் திருச்சியில்தான் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதாலும், சிறுபான்மையினர், இளைஞர்கள் அதிகமாக உள்ளதாலும், எப்படியும் 60 சதவீத வாக்குகளை எளிதாக திருச்சியில் தவெக பெறும் என்றும், திருச்சியில் விஜய் நேரடியாக களமிறங்கினால் இந்த வெற்றியின் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கக்கூடும் என்றெல்லாம் ரகசிய சர்வே கூறுகிறதாம்.
இப்படிப்பட்ட சூழலில் மூத்த அமைச்சரின் இந்த அதிரடி செயல்பாடும், மக்களை ஈர்க்கும் அணுகுமுறையும் மிகுந்த கவனத்தை தொகுதியில் பெற்று வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications