திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க முன்னாடி போங்க.. நான் பின்னாடி வர்றேன்.. செல்பி... முழக்கம்... என திருச்சியை கலக்கிய வைகோ

மொழிப்போர் தியாகிகளுக்கு வைகோ மாணவர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சியில் வைகோ

    திருச்சி: நீங்கதான் முன்னால் போகணும், நான் பின்னாடி வர்றேன் என்று சொல்லி... மாணவர்களுடன் செல்பி எடுத்து... வீர முழக்கமிட்டு... வைகோ திருச்சியையே இன்று திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.

    திருச்சி தொகுதியில் வைகோ போட்டியிட போவதாக ஒரு தகவல் சுற்றி கொண்டே இருக்கிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திருச்சியையே மையம் கொண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    அதன்படி, திராவிட இயக்க வரலாற்றில் மாணவர்களை முன்னிறுத்தி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார் வைகோ. இந்த நிகழ்ச்சிக்கு வைகோ தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    பின்னாடி வர்றேன்

    பின்னாடி வர்றேன்

    உழவர் சந்தையிலிருந்து இந்நிகழ்வு தொடங்கியது. 3 வரிசைகளில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது வைகோ மாணவர்களிடம் "நீங்கள்தான் ரொம்ப முக்கியமானவர்கள்... நீங்கதான் முன்னாடி போகணும், நான் பின்னாடி வர்றேன்" என்று சொல்லி அவர்களுடன் நடந்தே வந்தார் வைகோ.

    வீர வணக்கம்

    வீர வணக்கம்

    கீழப்பழூர் சின்னச்சாமி கல்லறை, விராலிமலை சண்முகம் நினைவிடங்களுக்கு சென்று மாணவர்களின் கைகளில் மலர்வளையத்தை தந்து வைக்க மரியாதை செலுத்த சொன்னார்.

    முழக்கமிட்ட வைகோ

    முழக்கமிட்ட வைகோ

    அப்போது "ஆதிக்க இந்தியை ஒழிப்பதற்கும், தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், தமிழ் ஈழம் பெறுவதற்காகவும் மாணவர்கள் கண்ணும், கருத்தோடும் செயல்பட வேண்டும்" என்று சொல்லி அவரே சத்தமாக முழக்கமிட்டதை கண்டு மாணவர்கள் வியப்பில் உறைந்து நின்றனர்.

    மாணவர்களுடன் பேச்சு

    மாணவர்களுடன் பேச்சு

    பிறகு பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் வைகோவுடன் சேர்ந்து நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். மாணவர்களுடன் நடந்தவாறே பேசிக் கொண்டு காரில் ஏறிக் கொண்டார் வைகோ.

    English summary
    MDMK General Secretary Vaiko paid homage to Anti Hindi Agitations in Trichy. He interacted with the students at this meeting and he took selfie with them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X