பிரியாணி விருந்து, ஒவ்வொரு வாரமும் மீட்டிங்.. விராலிமலை தவெகவினரை தன்பக்கம் இழுக்கும் விஜயபாஸ்கர்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியைச் சேர்ந்த தவெகவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பதை வாடிக்கையாக மாற்றி இருக்கிறார். ஒவ்வொரு நிகழ்விலும் அமைச்சர் பர்வேஸை புகழ்ந்து வரும் விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி தவெகவினருடன் தொடர்ந்து ஒவ்வொரு வராமும் மீட்டிங் போட்டு நட்பு பாராட்டி வருகிறார்.

அதிமுக சார்பாக விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வென்ற விஜயபாஸ்கர், ஒரே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினார். தவெகவில் இணைந்த அவர், தனது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி காட்டினார். இது முதல்வர் விஜய்யையும் உற்சாகம் அடைய வைத்தது. இதன் மூலமாக தவெக அமைப்பு ரீதியாக பலம் பெறும் என்று பார்க்கப்பட்டது.

Vijayabaskar

அதேபோல் தவெகவில் இணைந்த பின் விஜயபாஸ்கர் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். தவெக தரப்பில் அவருக்கு சீட் உறுதி கொடுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் தவெகவினர் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் கருதுகிறார். இதனால் அமைச்சர் பர்வேஸை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புகழ்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த போது, தனக்கென பிரத்யேக குழு அமைத்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கொண்டவர் விஜயபாஸ்கர். இப்போது தவெகவில் இணைந்த பின் அவரின் ரீல்ஸ்கள் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்து வருகின்றன. தவெகவில் இணைந்தாலும் தன்னுடைய சொந்த செல்வாக்கை இழக்க விஜயபாஸ்கர் விரும்பவில்லை.

விராலிமலை தொகுதி மக்களும், தவெகவினரும் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் கணக்கு போட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு வாரமும் விஜயபாஸ்கர் தவெகவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார். ஒவ்வொரு வார்டிலும் தவெகவினருடன் தொடர்ச்சியாக நட்புடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இதன் மூலமாக தவெகவினரின் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியும். ஏற்கனவே விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரையும் சாந்தப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இதன் மூலமாக விஜயபாஸ்கர் மீண்டும் விராலிமலை தொகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+