அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம்.. வழக்கு போட்டா சந்திக்க ரெடி.. வரிந்துகட்டி வந்த வைத்தி!
திருச்சி : எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை, அதிமுக சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்" எனக் கூறியுள்ளார் வைத்திலிங்கம்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.

எடப்பாடி அணி வார்னிங் : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும். அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ், சசிகலா என யாரும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட முப்பெரும் விழா மாநாட்டை ஓபிஎஸ் எப்படி நடத்த முடியும் என்ற கேள்வி எழுந்தது. கட்சி பெயர், கொடியை பயன்படுத்தாமல் ஓபிஎஸ் தரப்பால் மாநாட்டை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
திருச்சி மாநாடு ஏற்பாடுகள் : அதிமுக பெயரையோ, சின்னம், கொடியையோ ஓபிஎஸ் பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், திருச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது ஓபிஎஸ் அணி. அதுவும் அதிமுக கொடி, சின்னத்தோடு மாநாட்டு ஏற்பாடுகள் தயாராகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்.
ஒரிஜினல் அதிமுக : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளார்களா? வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நாளை வழக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
இப்போது எடப்பாடிக்கு சொந்தம் என்று எதுவுமில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றே சொல்லி உள்ளார்கள். திருச்சி மாநாட்டிற்கு அதிமுக மாநாடு என்ற பெயரில்தான் தொண்டர்களை அழைப்போம். நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிசாமியை வேண்டுமானால் இரண்டாவது அதிமுகவாக வைத்துக் கொள்ளலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications