Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயக்குமாரை பார்த்ததுமே.. பதறி எழுந்த எஸ்.ஐ.. அடுத்து நடந்ததுதான் விவகாரமே.. ஹாட் திருச்சி

திருச்சி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மாஜிக்கு வணக்கம் வைத்த விவகாரத்தில், காவல்துறை எஸ்ஐ ஒருவர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.. அத்துடன் இந்த சம்பவம் சர்ச்சையாகியும் வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, 49 வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், நில அபகரிப்பு செய்ததாகவும் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.. எனினும், அந்த 3 வழக்குகளிலும் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

 நிபந்தனை ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்

ஆனால், திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் 12ம் தேதி காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்... கோர்ட்டு உத்தரவுப்படி திருச்சியில் கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் அகிலா முன்னிலையில் கையெழுத்திட்டும் வருகிறார்.

 ஜெயக்குமார் விடுதலை

ஜெயக்குமார் விடுதலை

அதன்படி, 5வது நாளாக நேற்று கையெழுத்திட்டார்... ஜெயக்குமார் எப்போது கையெழுத்திட சென்றாலும், கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்குள் அவருடன் வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.. முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பலரும் போலீஸ் ஸ்டேஷன் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.. ஜெயக்குமார் எப்போது வந்தாலும், அவருடன் நிர்வாகிகள் திரண்டு வருவதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் நிலை உள்ளது.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

முன்னதாக, நேற்று கையெழுத்து போட ஸ்டேஷனுக்குள் ஜெயக்குமார் நுழைந்தார்.. அப்போது, கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, ஜெயக்குமாரை பார்த்ததும் அவருக்கு எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்... நீதிமன்ற உத்தரவால் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடும் முன்னாள் அமைச்சர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்பொழுது காவல்நிலைய உதவி ஆய்வாளர் எழுந்து இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 வயதுக்கு மரியாதை

வயதுக்கு மரியாதை

முன்னாள் அமைச்சர் என்பதால் மரியாதை நிமித்தமாக எஸ்ஐ வணக்கம் சொல்லியிருக்கலாம், அல்லது தமிழகத்தின் புகழ்பெற்ற கட்சியின் மூத்த தலைவர், அல்லது வயதுக்கு மரியாதை தந்தும், இப்படி எஸ்ஐ வணக்கம் தெரிவித்திருக்கலாம்.. மற்றபடி உள்நோக்கம் எதுவும் இருக்காது.. இதையெல்லாம் அரசியல் செய்கிறார்களே என்று ஒரு தரப்பினர் நொந்து கொண்டு சொல்கிறது.. ஜாமீனில்தான் அவர் உள்ளார், அதெப்படி ஒரு காவல்துறையை சேர்ந்த அதிகாரிக்கு இதுகூட தெரியாமல் போயிற்று என்று, இன்னொரு தரப்பு கேட்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+