பள்ளிகள் திறப்பு தேதி மாறுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியில் சொன்னதை கவனிச்சீங்களா?
திருச்சி: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேநேரம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்வதை பொறுத்து அதற்கு தகுந்தாற் போல் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் மே மாதம் என்பதால் இந்த மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 1-ம் தேதி திறக்கப்படும். அதேபோல தான் நடப்பு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆனால் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று கூறியுள்ள ராமதாஸ், கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியார்கள் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், "ஏற்கனவே உங்களுக்கு கடந்த ஆண்டு சொன்ன அதே தான்.. நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் எதுவும் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் எல்லா புத்தகங்களும் மாவட்ட சிஇஒ அலுவலங்களுக்கும் போய்விட்டது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, பிள்ளைகளுக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் வழங்கப்படும்.பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கிறீர்கள். கோரிக்கைகளை சொல்லியிருக்காங்க..
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. எங்களை பொறுத்தவரை திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும். தற்போது வரை பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. முதலமைச்சர் அவர்கள் சொல்வதை பொறுத்து அதற்கு தகுந்தாற் போல் முடிவெடுக்கப்படும் " இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தமிழ்நாட்டில் 185 ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நபார்டு வங்கி உதவி தேவைப்படுகிறது என்றும் நபார்டு வங்கி பள்ளிக்கல்வித்துறைக்கும் நிதி உதவி வழங்கும் என்றும் அதனை பெற்று ஒரு மாத காலத்திற்குள் பள்ளிகள் புதுப்பிக்கும் பணி துவங்கும் என்றும் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications