திருச்சி மேயராகும் யோகம் யாருக்கு? திமுகவில் வலுக்கும் போட்டி! கே.என்.நேருவை குழப்பும் நிர்வாகிகள்!
திருச்சி: திருச்சி மாநகர மேயராக திமுக சார்பில் யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்பது தான் இப்போது அம்மாவட்ட நிர்வாகிகளிடையே விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணன், கே.என்.சேகரன், அருண் நேரு, என லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்வதால் இதில் முதல்வரின் சாய்ஸ் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதனிடையே தங்கள் ஆதரவாளரிகளில் ஒருவரை மேயராக்க வேண்டும் என அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள்.

மத்திய மாவட்டம்
தமிழகத்தின் இதயப் பகுதியாக திகழும் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திமுகவுக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்த நகரம் என்று கூறலாம். இதனால் தான் என்னவோ, கருணாநிதி காலம் தொட்டு இன்று வரை திருச்சி மீது ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருகிறது திமுக தலைமை. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில், இந்த முறை மேயர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிர விசுவாசி
கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் கோட்டாவில் இருந்ததால் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேயராக முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த முறை ஆண்கள் போட்டியிட முடியும் என்பதால் முன்னாள் துணை மேயரும், அமைச்சர் கே.என்.நேருவின் அதிதீவிர விசுவாசியுமான அன்பழகன் மேயர் ரேஸில் முதலிடம் வகிக்கிறார். அன்பு அன்பு என அன்பழகன் மீது பிரியமும், மரியாதையும் வைத்துள்ள அமைச்சர் நேரு அவருக்காகவே பெண்கள் பிரிவிலிருந்து பொதுப்பிரிவுக்கு திருச்சி மாநகராட்சியை மாற்ற நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்பில் ஆதரவாளர்
இதற்கு அடுத்தபடியாக மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளரும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளருமான மதிவாணன் மேயர் வேட்பாளர் ரேஸில் அன்பழகனுக்கு டஃப் கொடுக்கிறார். சுறுசுறுப்பான களப்பணியால் அன்பில் மகேஷின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கக் கூடிய இவரை மேயராக்க ஒரு டீம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதேபோல் வெளிப்படையாக தனது விருப்பத்தை தெரிவிக்க மறுத்தாலும், முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரனுக்கும் மேயர் பதவி மீது ஒரு கண் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் குழப்பம்
இதனிடையே கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிலர், சமீபநாட்களாக அவரை குழப்பும் வகையில் ஒரு கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள். அதாவது உங்கள் மகன் அருணை மேயராக்குங்கள் என நேருவிடம் கோரஸாக கோரிக்கை வைத்து வருகிறார்கள் சிலர். ஆனால் தன்னுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் அன்பழகனுக்கு ஒரு வாய்ப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இதற்கு சற்றும் சளைக்காமல் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பும் கடும் டஃப் கொடுத்து வருகிறது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications