செலவு பண்ண "அவ்வளவு" கோடியும் வேஸ்ட்டா.. கண்ட காட்சியால் உறைந்து போன ஓபிஎஸ்! எல்லாமே வீணாகிடுச்சாமே
திருச்சி: திருச்சியில் நடந்த முப்பெரும் விழா மாநாடு தோல்வி அடைந்த காரணத்தால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது.

தேர்தல் ஆணையமும் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அதிகாரபூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதையடுத்தே நேற்று தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் மாநாட்டை நடத்தினார் ஓ பன்னீர்செல்வம். ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த மாநாடு தோல்வியில் முடிந்து உள்ளது.
ஏற்பாடு:
நேற்று நடந்த இந்த கூட்டத்திற்காக ஓ பன்னீர்செல்வம் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்த கூட்டம் தனது அரசியல் வாழ்க்கையை மாற்றும்.
மொத்தமாக அதிமுகவை தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும். அதிமுகவில் தான் தலையெடுக்க இந்த ஒரு நாள் வழிவகுக்கும். திருச்சி திருப்பம் கொடுக்கும் என்றெல்லாம் ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக நம்பினார்.
முக்கியமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களை களமிறக்க வேண்டும். கூட்டத்தை காட்டினாலே போதும் நாம் பெரிய ஆள் என்றும், நமக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கும் என்று நிரூபிக்க முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நினைத்துள்ளார்.
செலவு:
இதற்காக எப்போதும் செலவு செய்யாத ஓ பன்னீர்செல்வம் நேற்று நடந்த கூட்டத்திற்காக தீவிரமாக செலவு செய்தார். அதிமுக அலுவலகம் மாடலில் மேடை அமைத்தது தொடங்கி விழாவிற்கு வந்தவர்களுக்கு இரவு சாப்பாடு, மாலையில் சாப்பிட ஒரு சப்பாத்தி, தண்ணீர், குளிர் பானங்கள், வாகன ஏற்பாடு என்று பிரம்மாண்டமாக தயார் செய்து இருந்தார்.
இதற்காக ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார். பொதுவாக இத்தனை கோடிகளை செலவு செய்யாத அவர் நேற்று 20 கோடி ரூபாய் செலவு செய்து மீட்டிங் நடத்தினார்.
கூட்டம்
ஆனால் நேற்று 10 ஆயிரம் என்ற அளவிற்கு கூட கூட்டம் வரவில்லை. 20 ஆயிரம் சேர்கள் போடப்பட்டு இருந்தன. ஆனால் வந்தது என்னவோ பாதிக்கும் குறைவான கூட்டம்தான்.
40 ஆயிரம் பேரை எதிர்பார்த்து 20 ஆயிரம் சேர்களை போட்ட போதே ஓ பன்னீர்செல்வத்திற்கு கூட்டம் வராது என்று தெரியும் என்கிறார்கள்.

அதெல்லாம் போக நேற்று ஓ பன்னீர்செல்வம் பேசும் முன்பே பலர் கிளம்பி செல்ல தொடங்கிவிட்டனர். சாப்பாடு வாங்க சென்றுவிட்டு, கூட்டத்தில் இருந்தும் கிளம்பி சென்றுவிட்டனர்.
நேற்று ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்கவும் பெரிய அளவில் கூட்டம் இல்லை. அவர் வாகனம் வந்த போது.. அங்கே அவரை வரவேற்க பெரிய அளவில் கூட்டமும் இல்லை.
அங்கேயே ஓபிஎஸ் முகம் வாடியப்போய் இருந்தது. அதன்பின் மேடையிலும் மற்ற மூத்த தலைவர்கள் பெரிதும் ஆர்வம் இன்றி அமர்ந்து இருந்ததால் ஓபிஎஸ் பெரிய அளவில் அழுத்தத்துடன் காணப்பட்டார்.
வழக்கில் தோல்வி.. தேர்தல் ஆணைய விவகாரத்தில் தோல்வி.. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.
-
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications