பெங்களூர் என்ன பெங்களூர்.. இதை மட்டும் பண்ணுனா போதும்.. திருச்சி வேற லெவலுக்கு மாறும்! மாறும் போகஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டில் மையத்தில் இருக்கும் திருச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு மட்டும் கொடுத்து வந்த முக்கியத்துவம் தற்போது பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் தொடர்ந்து முன்னேற்ற அடைந்து வருகின்றன.

அதிலும் கிருஷ்ணகிரியில் இருக்கும் ஓசூர் இந்தியாவின் இ வாகன தலைமையிடமாக மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன. கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

Why people want to expand the Trichy airport amid the heavy rain in Chennai?

2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி போன்றவை முதலீடுகளில் முன்னிலை வகித்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மையத்தில் இருக்கும் திருச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

விமான நிலையம்: முக்கியமாக திருச்சி விமானநிலைய ஓடுதளத்தை விரிவாக்க வேண்டும். அதை பெரிதாக்க வேண்டும். பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுபாதையை பெரிதாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையில் கனமழையால் பெங்களூருக்கு பன்னாட்டு விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

சென்னையில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்தே சென்னையில் கனமழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது. அதிகாலை 7 மணிக்கு பின் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 மணி நேரம் விட்ட மழை மீண்டும் 8 மணிக்கு தொடங்கியது. அதன்பின் தொடர்ச்சியாக 12 மணி வரை மழை பெய்தது. மீண்டும் 2 மணி நேரம் விட்ட மழை இப்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருந்தது.

Why people want to expand the Trichy airport amid the heavy rain in Chennai?

முக்கியமாக சென்னையில் 10 நாட்களாக விடாமல் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இந்த நிலையில் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்தது. விடாமல் பெய்த மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு புரட்டி எடுத்த மழை இன்று அதிகாலை குறைந்துள்ளது. தற்போது மழை இல்லாத லேசான வெயில் நிலவி வருகிறது. இந்த மழையால் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. சென்னை விமானநிலையமானது மழை, மூடுபனி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு அண்டை மாநில பெங்களூருவையே மாற்றாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில்தான் திருச்சி விமானநிலைய ஓடுதளத்தை விரிவாக்க வேண்டும். அதை பெரிதாக்க வேண்டும். பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுபாதையை பெரிதாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+