குப்பை கொட்டுவதில் பிரச்சனை.. பறிபோனது 2 உயிர்.. வெட்டிக் கொன்றவருக்கு 2 ஆயுள் தண்டனை
திருச்சி: திருச்சி அருகே இரண்டு பெண்களை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர் தீர்ப்பு வழங்கினார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள திண்ணியம் கிராமம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன்கள் சுதாகர், சுரேஷ். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பன்னீர். இவர்கள் குடும்பத்திற்கிடையே குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பன்னீரின் சகோதரர்கள் ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் சுதாகரின் அண்ணன் சுரேஷ் என்பவரை வெட்டிக் கொலை செய்தனர். இதனால் இரு குடும்பத்தாரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி பன்னீரின் தாய் செல்லம்மாளும், அத்தை அமராவதியும் அவர்கள் வீட்டருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை சுதாகர்(23) அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த சதீஷ் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. இதையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இன்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர் தீர்ப்பளித்தார். அதில் சுதாகருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சதீஷை வெட்டியதற்காக கூடுதலாக 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து சுதாகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications