அமைச்சர் தங்கமணியின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு
அஇஅதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் தங்கமணியின் கட்சிப்பதவியையும் பறித்து கொங்கு மண்டல அஇஅதிமுக பிரமுகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
சென்னை: அமைச்சர் தங்கமணி, அஇஅதிமுக அம்மா அணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அஇஅதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினமும் ஒவ்வொரு முக்கிய பிரமுகராக நீக்கி வருகிறார். இதன்மூலம் அவருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் தங்கமணியை நீக்கம் செய்துள்ளார் தினகரன். தங்கமணிக்கு பதிலாக எஸ். அன்பழகன் நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications