சாத்தான்குளம் கிணற்றில் பாய்ந்த கார்! 1 வயது குழந்தை உள்பட 5 பேர் பலி! 30 பவுன் நகைகள் மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய விபத்தில் கோவையை சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் அவர்களது 30 பவுன் நகைகளும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை பகுதியில் இன்று நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறு ஓடியது. அப்போது அங்கிருந்த சாலையோர கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் விழுந்தது.
இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 7 பேர் கிணற்றுக்குள் மூழ்கினர். அப்போது காருக்குள் இருந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கார் கதவை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறி கதறியுள்ளனர்.
உடனே மீரான்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த 7 பேரையும் இறந்த நிலையில் மீட்டனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் எல்லாம் கோவையைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்ததால் அவர்கள் அணிந்திருந்த, கொண்டு வந்த நகைகள் சுமார் 20 முதல் 30 பவுன் இருக்கும் என உறவினர்கள் போலீஸில் தெரிவித்தனர். இதையடுத்து கிணற்றிலிருந்து குறிப்பிட்ட அளவு நீரை வெளியேற்றி, முத்துகுளிக்கும் வீரர்களை கொண்டு நகைகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து 30 பவுன் நகைகளும் கண்டெடுக்கப்பட்டன. கிணற்றுக்குள் விழுந்த உடை வைத்திருந்த பைகளும் மீட்கப்பட்டன. அந்த பைகளிலும் சில நகைகள் அட்டை பெட்டியில் இருந்து மீட்கப்பட்டது. அதில் குழந்தையின் செயின் இருந்தது. இது பார்ப்போரை கலங்கச் செய்கிறது.
உயிரிழந்தவர்கள் ரவி கோயில் பிச்சை (60), ஹெச்சியா கிருபாகரன் (49), மோசஸ் (50), வசந்தா (49), குழந்தை ஸ்டாலின் (ஒன்றரை வயது) என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொண்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், சாலைகளின் தரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து அதனை சுற்றி சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: வரலாறு காணாத அளவு சரிந்த தங்கம் விலை.. இன்று வந்த மெகா இன்ப செய்தி! நகை பிரியர்களே ரெடியா! -
SGB தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா நீங்க? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு.. இதோ முழு விபரம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications