இந்த ஒரு அறிவிப்பு.. உலக வரைபடத்தில் தமிழ்நாட்டை உச்சத்திற்கு கொண்டு போகும்.. ஸ்டாலின் சிக்ஸர்!
தூத்துக்குடி: உலக கடல்சார் வர்த்தக வரைபடத்தில் தமிழகத்தை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும் வகையில், தூத்துக்குடியில் ₹5,200 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட கப்பல் கட்டும் வளாகம் (Shipbuilding Cluster) அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இன்று அறிவிக்கப்பட்ட இடைக்கால தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், "முத்து நகரத்தை" சர்வதேச கப்பல் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOCPA) மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT) ஆகியவற்றின் 50:50 கூட்டு முயற்சியான தேசிய கப்பல் கட்டுதல் மற்றும் கனரக தொழில்துறை பூங்கா (NSHIP, TN) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடிக்கு ஸ்பெஷல் திட்டம்
சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவிலும், 2 கிலோமீட்டர் கடற்கரை நீளத்திலும் அமையவுள்ள இந்த வளாகம், ஒரு முழுமையான தொழில் சூழலை உருவாக்கும். இதில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் (VLCCs) மற்றும் கடற்படை போர்க்கப்பல்களைக் கட்டும் தளங்கள் மட்டுமல்லாமல், அவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் (MSMEs) இடம்பெறும்.
இந்தக் கப்பல் கட்டும் வளாகம் மூலம், 2047-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் கப்பல் கட்டும் நாடுகளில் தமிழகத்தை 5-வது இடத்திற்கு கொண்டு செல்வதே அரசின் இலக்காகும். சர்வதேச கடல் வழித்தடத்திற்கு மிக அருகில் தூத்துக்குடி அமைந்துள்ளதால், உலக நாடுகளின் கப்பல்கள் பராமரிப்புக்காக இங்கு வருவது எளிதாகும். இதன் மூலம் சுமார் 55,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, கப்பல் கட்டும் துறையில் உருவாகும் ஒவ்வொரு நேரடி வேலைவாய்ப்பும், போக்குவரத்து மற்றும் இதர துணைத் தொழில்களில் மேலும் பலருக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் ஒரு பொருளாதார மாற்றத்தை (Multiplier Effect) ஏற்படுத்தும்.
இதற்காக தமிழ்நாடு கடல்சார் உற்பத்தி கொள்கை 2025-ஐ அரசு வகுத்துள்ளது. இதன் மூலம் தென் கொரியாவின் HD ஹூண்டாய் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. சங்க காலத்திலிருந்தே கடல் கடந்து வாணிபம் செய்த தமிழர்களின் பெருமையை மீட்கும் ஒரு நவீன முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்
தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் கனவுத் திட்டங்களில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களான கொச்சின் ஷிப்யார்ட் மற்றும் மசாகன் டாக் ஆகியவற்றுடன் இணைந்து, தூத்துக்குடி இந்தியாவின் புதிய கடல்சார் தலைநகரமாக உருவெடுத்து வருகிறது.
2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 17 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 5.11 லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, இதற்காக ரூ.413 கோடி செலவிடப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டம், இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது; பேருந்து நிலையம், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பட்டு வருகிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இரட்டை இலக்க பொருளாதார இலக்கை அடைய பல திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன. சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் ரூ.287 கோடி மதிப்பில் அமைக்கப்படும். உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன.
தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டு, 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது;
உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்; செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது; நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம். திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகளிர் உரிமை தொகை ரூ. 5000 முன்கூட்டியே வழங்கப்பட்டு உள்ளது. இதை மொத்த நாடும் திரும்பி பார்த்து உள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம். அந்த தொகை பாதிக்கக்கூடாது என்பதால் முன்கூட்டியே வழங்கி உள்ளோம்.. இந்த திட்டம் தொடர்ந்து தடைபடாமல் வழங்கப்படும்.
விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை, உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications