பாவம்.. பனை மரத்தின் உச்சியில் துடித்த உயிர்.. தொழிலாளியின் கடைசி நிமிடங்கள்.. பதறவைத்த தூத்துக்குடி
மரத்தில் ஏறிய பனைமர தொழிலாளி திடீரென மரணமடைந்தார்
தூத்துக்குடி: பனை மரத்து உச்சியில் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி இருக்கிறார் நடேசன்.. அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் கடைசியில் அநத் பனை மர தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள பகுதி விஜயநாராயணபுரம்.. இங்கு வசித்து வந்தவர் நடேசன்.. 63 வயதாகிறது.. இவர் ஒரு பனை மர தொழிலாளி.. கிருஷ்ணகுமார் என்பவரது தோட்டத்தில்தான் நடேசன் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், பதனீர் இறக்க போகிறேன் என்%ற வீட்டில சொல்லிவிட்டு கிளம்பி போயுள்ளார் நடேசன்.. ஆனால் அவர் ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

பனைமட்டை
அதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கணவரை தேடி தோட்டத்துக்கு போனார்.. அப்போது பனை மரத்தின் உச்சியில் நடேசன் தொங்கி கொண்டிருந்தார்.. பனை மட்டைகளுக்கு இடையே அரை மயக்கத்தில் கிடநத்தை கண்டு அலறினார் மனைவி... சத்தம் கேட்டு அங்கிருந்தோர் ஓடிவந்தனர்.. அதில் சக பனை தொழிலாளி ஒருவர் மேலெ மரம் ஏற முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.

தகவல்
அதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது.. அவர்களும் விரைந்து வந்தனர்.. ஆனால், அந்த பனை மரம் ஏறும் அவர்களிடம் அடுக்கு ஏணி வசதி இல்லை.. அவர்களில் யாருக்கு.ம் பனை மரம் ஏறும் அளவுக்கு பயிற்சியும் இல்லை.. அதனால் ஏணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு கயிறு கட்டிக் கொண்டு பனை மரம் ஏறினர் வீரர்கள்.. இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

மயக்கம்
மயங்கி கிடந்த நடேசனை மீட்டு அதற்குள் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது.. ஆனல் எவ்வளவோ முயற்சித்தும் நடேசனை காப்பாற்ற முடியவில்லை.. கடைசி வரை நினைவு திரும்பாமயே நடேசன் உயிர் பிரிந்துவிட்டது. நடேசனுக்கு என்ன ஆனது? எதனால் பனைமட்டைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டார் என தெரியவில்லை.. பல வருடமாக பனை மரம் ஏறும் பழக்கப்பட்ட தொழிலாளிக்கு மரம் ஏறுவதில் பிரச்சனை இருந்திருக்காது என்றே தெரிகிறது.

தோட்ட தொழிலாளி
ஆனாலும் ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதேசமயம், தீயணைப்பு வீரர்களிடம் உயரமான அடுக்குகளை கொண்ட ஏணிகள் கையிருப்பில் இல்லாதது அதிர்ச்சியை தருகிறது.. நகர்ப்புறங்களில் இல்லாவிட்டாலும், தென்மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் இந்த ஸ்கைலிப்ட எனப்படும் ஏணிகளை அவசரத்துக்கு கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.. இன்று நடேசன் போல வேறு எந்த அப்பாவி தொழிலாளிக்கும் இப்படி ஒரு துயரம் வந்துவிடக்கூடாது!
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications