‛ஒரேயொரு ஓட்டு தான்’.. மொத்தமும் போச்சே.. தூத்துக்குடியில் குமுறிய வேட்பாளர்.. மீண்டும் மீண்டுமா?
தூத்துக்குடி: தேர்தலில் நாம் செலுத்தும் ஒவ்வொரு ஓட்டுகளும் மிகவும் முக்கியம். அதேபோல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டுகளும் அவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளன. இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒரு ஓட்டின் முக்கியத்துவம் பற்றி தெளிவாக புரிய வைத்துள்ளது.
18 வயது நிரம்பிய அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஓட்டுரிமை வழங்குகிறது. இதனால் 18 வயதை எட்டிய இளைஞர்கள் மறக்காமல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஒவ்வொரு தேர்தலிலும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் சரியான மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய முடியும்.

ஆனால் இன்றும் கூட பலர் 18 வயது நிரம்பினாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். இன்னொரு தரப்போ வாக்காளர் பட்டியலில் பெயரை இணைத்திருந்தாலும் கூட தேர்தலில் ஓட்டுப்போடுவது கிடையாது. இத்தகைய செயல்பாடுகள் மிகவும் தவறானது.
ஏனென்றால் நாம் செலுத்தும் ஒவ்வொரு ஓட்டுகளும் தேர்தலில் மிகவும் முக்கியம். இந்நிலையில் தான் தேர்தலில் நாம் செலுத்தும் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
தமிழகத்தில் கடந்த 2019 ம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி ஊராட்சியிலும் தேர்தல் நடந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரன், முரளி மனோகரன் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 3,088 ஓட்டுகள் உள்ளன.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ராஜேஸ்வரன் 1071 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய முரளி மனோகரன் 1070 ஓட்டுகள் பெற்றார். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முரளி மனோகரனை வீழ்த்திய ராஜேஸ்வரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் காயாமொழி ஊராட்சி தலைவரானார்.
இது ஒருபுறம் இருக்க ஒரு ஓட்டில் தோல்வியடைந்த முரளி மனோகரன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛‛ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி மற்றும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் ஒரு ஓட்டில் நான் தோல்வியடைந்துள்ளேன். இதனால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்'' என்பதை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காயாமொழி ஊராட்சியில் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காயாமொழி ஊராட்சிக்கான மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி ஆன்ட்ரூ முன்னிலையில் காலையில் தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை 3 மணி நேரம் நடந்தது. அதன்பிறகு ரிசல்ட் அறிவிக்கப்பட்டது.
இந்த ரிசல்ட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முரளி மனோகரனுக்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனென்றால் மறு ஓட்டு எண்ணிக்கையின்போதும் ராஜேஸ்வரன் 1069 ஓட்டுகள் பெற்றதாகவும், முரளி மனோகரன் 1068 ஓட்டுகள் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மீண்டும் ராஜேஸ்வரன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், முரளி மனோகரன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் மீண்டும் அறிவிக்கப்பட்டது.
கடந்த முறை ராஜேஸ்வரன் 1071 ஓட்டுகளும், முரளி மனோகரன் 1070 ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறை ராஜேஸ்வரன் 1069 மற்றும் முரளி மனோகரன் 1068 ஓட்டுகள் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த முறையை நடந்த ஓட்டு எண்ணிக்கையை விட இந்த முறை ராஜேஸ்வரன் மற்றும் மனோகரன் ஆகியோர் தலா 2 ஓட்டுகள் குறைவாக பெற்றாலும் கூட வெற்றி வித்தியாசமான ஒரு ஓட்டு என்பது மாறவில்லை.
இதனால் காயாமொழி ஊராட்சி தலைவராக ராஜேஸ்வரன் தொடர்வதில் எந்த சிக்கலும் வரவில்லை. அதேவேளையில் இந்த ஊராட்சிக்கு கடந்த 2019ல் தேர்தல் நடந்த நிலையில் தலைவர் பதவிக்கான காலஅவகாசம் என்பது இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. அதன்பிறகு காயாமொழி ஊராட்சிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications