டைகர் கா ஹுக்கும்! ‘ஜெயிலர்’ மொத்த தியேட்டரையும் புக் செய்து ‘மாநாடு’ அழைப்பு விடுத்த அதிமுக மாஜி!
தூத்துக்குடி:'ஜெயிலர்' பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி, அதிமுக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க ஜெயிலர் டிக்கெட்களை மொத்தமாக புக் செய்து இலவசமாக ரசிகர்களுக்கு வழங்கிள்ளார் கடம்பூர் ராஜூ.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அ.தி.மு.கவின் பொன்விழா எழுச்சி மாநாடு மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, தனது செல்வாக்கைக் காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை வலையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநாட்டு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டு அழைப்பிதழை அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி பகுதிகளில் வழங்கி, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அந்தவகையில், ஒரு நூதன முயற்சியையும் மேற்கொண்டுள்ளார் கடம்பூர் ராஜூ.
கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் இன்று 'ஜெயிலர்' திரைப்படத்தின் காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டு, படம் பார்க்க வரும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக 'டிக்கெட்' வழங்கி, மதுரை அதிமுக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கடம்பூர் ராஜூ.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 'ஜெயிலர்' பார்க்க வரும் ரசிகர்களை அதிமுக மாநாட்டுக்கு அழைக்கும் விதமாக இலவசமாக 'ஜெயிலர்' டிக்கெட் வழங்கியுள்ளார் கடம்பூர் ராஜூ. அதிமுக சார்பில் இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் செய்தி அறிந்து, ஏராளமானோர் இன்று காலை காட்சி 'ஜெயிலர்' பார்க்க கோவில்பட்டி தியேட்டரில் குவிந்தனர்.
ரஜினிகாந்த், 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் என போக்கு காட்டி வந்த நிலையில், தற்போது அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ, ரஜினி ரசிகர்களை அதிமுக மாநாட்டுக்கு அழைத்துள்ளது, விவாதமாகியுள்ளது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications