10% வாக்கு வங்கி இருக்காது.. முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள்.. விஜய் மீது அதிமுக அட்டாக்!
தூத்துக்குடி: புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் தலைவர் கூட அடுத்த முதலமைச்சர் என்று சொல்வார்கள்.. இது தேர்தல் திருவிழாவில் சகஜம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக தலைவர்கள் விஜய்யை அட்டாக் செய்ய தொடங்கியுள்ள நிலையில், விஜய்யை அதிமுக கூட்டணிக்கு நேரடியாக அழைத்த கடம்பூர் ராஜுவும் கிண்டல் செய்ய தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக நியமனம் செய்யப்பட்ட பிஎல்ஓ-க்கள் உடன் திமுக நிர்வாகிகள் முழுமையாக பயணித்து வருகின்றனர். ஆங்காங்கே அதிமுகவினரும் பிஎல்ஓ-க்களுடன் வந்தாலும், அதிமுக இன்னும் இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகவில்லை என்று பார்க்கப்படுகிறது.

சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தால் தங்களின் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பறிபோக வாய்ப்பு உள்ளதாக சில கட்சிகள் உணரத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ SIR பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார். இதையடுத்து கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சில பேர் ஆருடம் கூறுவார்கள்.. நான் முதலமைச்சர் , நீ முதலமைச்சர் என்று.. அது இயற்கை.. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கூட முதலமைச்சர் என்று சொல்வார்கள்..
அதேபோல் 10 சதவிகிதத்திற்கு கீழ் வாக்கு வங்கி உள்ளவர்கள் கூட முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள்.. தேர்தல் திருவிழாவில் இதெல்லாம் சகஜம். 50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம் அதிமுக. "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்று 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முதன் முதலில் பிரச்சாரத்தை தொடங்கியது அதிமுக தான்.
மக்கள் மற்றும் தொண்டர்களை நம்பி தேர்தல் களத்திற்கு வந்துள்ள இயக்கம் அதிமுக. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்பது அதிமுகவின் முழக்கமாக மட்டுமல்லாமல் மக்களின் முழக்கமாகவும் மாறி உள்ளது. SIR என்ற வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது புதிது கிடையாது. ஆனால் மத்திய அரசு சதி செய்வது போல திமுக ஒரு மாயையை ஏற்படுத்தி தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம், வழக்கு மன்றம் என்று சொல்லும் திமுக, மறுபக்கம் SIR கள பணியில் அதிகம் ஈடுபட்டு வருகிறது. இதிலிருந்து அவர்களுடைய இரட்டை நிலைப்பாடு தெரிகிறது. எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தார் பகுதியில் ஒருவர் இறந்து ஐந்தாண்டு ஆகிவிட்டது. அவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய மனு கொடுத்த போதிலும் தற்போது வரை அவரை நீக்கம் செய்யவில்லை.
இது போன்ற குழப்பங்களை நீக்குவதற்கு தான் இந்த SIR பணிகள் என்று தெரிவித்தார். அதிமுக கூட்டணிக்குள் விஜய் கட்சி வர வேண்டும் என்று முதல் முதலாக அழைப்பு விடுத்தவர் கடம்பூர் ராஜு தான். ஆனால் அவரே விஜய்யை மறைமுகமாக சாட தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே அதிமுகவின் முக்கிய தலைகளான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
விஜய் உடனான கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று அதிமுகவினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் விஜய்யை சேர்த்து எதிர்க்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே தவெக மற்றும் விஜய்யை மறைமுகமாக சீண்ட தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு











Click it and Unblock the Notifications