டென்ஷனில் தூத்துக்குடி.. போலீஸ் மீது குண்டு வீச்சு.. போலீஸ்காரர் மரணம்.. குண்டு வீசிய ரவுடியும் பலி
நாட்டு வெடிகுண்டு வீசியதில் போலீஸ்காரர் பலியானார்
தூத்துக்குடி: காட்டுக்குள் போலீஸை பார்த்ததுமே எகிறி குதித்து தப்பி ஓடினார் ரவுடி துரைமுத்து.. தன்னை துரத்தி வந்த போலீஸ்காரர்கள் மீது அவர் வெடிகுண்டை வீசியதில், சுப்பிரமணி என்பவர் ரத்த வெள்ளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.. இதையடுத்து தூத்துக்குடியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
ரவுடி ஒருவரை தூத்துக்குடி போலீசார் ரொம்ப நாளாக தேடி வந்தனர்.. இவர் மணக்கரை பகுதியை சேர்ந்தவர்.. பெயர் துரைமுத்து.. ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்.

இந்நிலையில், வல்லநாடு மனக்கரை காட்டு பகுதியில் இந்த ரவுடி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனால் விரைந்து சென்று அந்த காட்டுக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. அப்போது அந்த ரவுடியையும் காட்டுக்குள் கண்டுபிடித்துவிட்டனர்.
அவரை கைது செய்ய முயன்றபோது, போலீசாரை பார்த்ததும் நல்லமுத்து தப்பி ஓட முயன்றார்.. மேலும் போலீசார் தன்னை கைது செய்ய கூடாது என்பதற்காக, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார்.. இந்த வெடிகுண்டு, போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் மீது பட்டுவிட்டது.
இதில், ரத்த வெள்ளத்தில் சுப்பிரமணி அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் அவரது உடலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.. இந்த வெடிகுண்டு வீச்சில் மேலும் போலீஸ்காரர் படுகாயம் அடைந்து உள்ளார். அவருக்கும் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. அவர் சீரியஸாக இருக்கிறாராம்.
எனினும் காட்டுப் பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. கடைசியில் படுகாயங்களுடன் துரைமுத்துவை கைது செய்துவிட்டனர்.. அவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, துரைமுத்துவும் உயிரிழந்தார்.
காட்டு பகுதியில் ஆயுதங்களுடன் வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்... துரைமுத்துவுடன் மேலும் 2 குற்றவாளிகள் இருந்தனர்.. அவர்களை துரத்தி பிடிக்கும் பணி நடக்கிறது.. இவர்களுக்கு எவ்வாறு ஆயுதங்கள் கிடைத்தது? மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவலறிந்த மாவட்ட எஸ்பி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்... இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு.. தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொலை வழக்கில் 76 நாளில் தீர்ப்பு! -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மூக்கு சிகிச்சை.. பறிபோன உயிர்! மயக்க மருந்தால் மங்கிய கனவு! சொந்த ஊருக்கு சென்ற நர்சிங் மாணவி உடல்! -
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
பாதுகாப்பு கேட்டு போலீஸுக்கு போனா..போலீஸ்கிட்ட இருந்தே பாதுகாக்கனும் போல! எக்குத்தப்பு SI-க்கு பாடம் -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு












Click it and Unblock the Notifications