தாலி கட்டியதுமே மணமேடையில் மணப்பெண் செய்த காரியம்.. காற்றில் சுழன்ற சுருள் வாள்.. அசந்த தூத்துக்குடி
தூத்துக்குடி: பிற நாடுகளை போலவே, வித்தியாசமான திருமண நிகழ்வுகள் இந்தியாவிலும் சமீபகாலமாகவே நடைபெற்று வருகிறது.. இந்த திருமணங்களின் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் (Wedding Viral Video) மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.. இவைகள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகிவிடுகின்றன.. அந்தவகையில் தூத்துக்குடியிலும் ஒரு திருமணம் வைரலாகி உள்ளது.
மணமகளின் முடியை வெட்டுவது, மணமகனை கட்டி உதைப்பது வரை மக்கள் வித்தியாசமான மரபுகளை பின்பற்றி வருகிறார்கள். இப்படி வெவ்வேறு நாடுகளின் திருமணத்தை பற்றி நாம் பார்ப்போம்.

தமிழகத்தில் சமீபகாலமாகவே ஆச்சரியமூட்டும் திருமண வைபவங்கள் நடந்து வருகின்றன.. இதில் தாய்மாமன் சீர் தவிர்க்க முடியாதது.
தாய் மாமன் சீர்கள் இன்றுவரை அதன் முக்கியத்துவத்தை குறையாமல் உள்ளது.. கடந்த மாதம் புதுக்கோட்டையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது..
காதுகுத்து, தாய் மாமன் சீர்
புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஒருவர், சிங்கப்பூரில் பல வருடகாலம் பணிபுரிந்து வருகிறார்.. தன்னுடைய 2 பிள்ளைகளுக்கு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வருமாறு, தன் கம்பெனிக்கு முதலாளிக்கு பத்திரிகை வைத்து அழைத்திருநத்ர்.. தாய் மாமன் மட்டும்தான் சீர்வரிசை தர வேண்டுமா? நாங்கள் தரக்கூடாதா? என்று கேட்டு, சிங்கப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்து அசத்திவிட்டார்கள் சிங்கப்பூர் முதலாளிகள்.
காதுகுத்து என்றில்லை, நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் பெருகி வருகின்றன.
கல்யாண வீட்டில் கலை நிகழ்ச்சிகள்
திருமணத்திற்கான சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு நடுவே, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன..
முன்பெல்லாம் நடனம் ஆடுவதற்கும், பாட்டு பாடுவதற்கும், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அதற்கேன தனித்தனியாக குழுக்கள் இருப்பார்கள்.. இவர்களுக்கு முன்கூட்டியே அட்வான்ஸ் தரப்பட்டு, வாகன ஏற்பாடுகள் செய்து வரவழைத்து திருமணத்தில் நிகழ்ச்சியை நடத்த செய்வார்கள்.. இதற்கான கூடுதலாக ஒரு தொகையையும் செலவழிப்பார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் கல்யாண வீட்டிலேயே கலை நிகழ்ச்சிகள் களை கட்டுகின்றன.. அதிலும் மணமக்களே கழுத்தில் மாலையுடன் டான்ஸ் ஆடி, அரங்கத்தையே கவர்ந்து விடுகிறார்கள்..
கருப்பு கூலிங் கிளாஸ்
சமீபத்தில் கேரள மாநிலத்தில் இப்படித்தான் ஒரு மணமகள், சிவப்பு வண்ண பட்டுப்புடவை அணிந்து பாரம்பரியமான தோற்றத்தில் மணமேடையில் வந்து நின்றார்.. பிறகு யாருமே எதிர்பார்க்காத வகையில், கலக்கலாக நடனம் ஆடி அசத்திவிட்டார். திருமணத்திற்கு வந்தவர்கள் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.. அனைவரும் கைதட்டி ரசித்தனர்..
பிறகு தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்பரிடமிருந்து கருப்பு கூலிங்கிளாஸை வாங்கி, அதை அணிந்து கொண்டு, மீண்டும் நடனமாடி அரங்கையே கைதட்டலால் அதிர விட்டார் மணமகள்.
சிலம்பம் சுற்றிய மணப்பெண்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் இதுபோன்ற ஹேப்பி சம்பவம் நடந்துள்ளது.. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சாயர்புரத்தை சேர்ந்த தம்பதி சாமுவேல் - சேர்ம ஜெயா. இவர்களது மூத்த மகள் நந்தினி அமிர்தா, சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இவரது திருமணம் சாயர்புரம் அடுத்த நடுவக்குறிச்சி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.. மணமகளுக்கு தாலி கட்டு முடிந்ததுமே, மண்டபத்தில் அனைவரும் குரூப் போட்டோக்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் மணப்பெண் நந்தினி அமிர்தா, மணமேடையில் இருந்து கீழே இறங்கி சிலம்பம் சுற்ற ஆரம்பித்தார்... இதை மணமகனும், திருமண வீட்டிற்கு வந்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சுருள் வாள் சுற்றிய மணமகள்
சிறிது நேரத்தில் அவருடன் சேர்ந்து மணப்பெண்ணின் சகோதரியும் சிலம்பம் சுற்றியதால் அங்கிருந்தவர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மணப்பெண் நந்தினி அமிர்தா, சுருள்வால் சுற்றியும் அசத்தினார். இதை அங்கிருந்தவர்கள் ஆரவாரத்துடன் தங்களது செல்போன்களில் வீடியோ, போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த இணையவாசிகள் மணமகள் நந்தினிக்கு பாராட்டு தெரிவித்ததுடன், மணமக்கள் இருவருக்குமே வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications