தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின்.. கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல்! வாக்குப்பதிவு விறுவிறு
தூத்துக்குடி: தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் திருமண்டல கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது (Nazaresth election).
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், கடந்த 2003ம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, மிகப்பெரிய திருமண்டலமாக செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 140 சேகரங்களுக்கும் அந்தந்த ஆலயங்களில் வைத்து தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தகுதி உள்ளவர்களாக ஆலயத்திற்கு கட்ட வேண்டிய சந்தா தொகை, கட்டி இருக்க வேண்டும் ஆலயத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும், வருடத்திற்கு மூன்று முறை திரு விருந்து ஆராதனையில் பங்கு பெற்றிருக்க வேண்டும், 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் நாளன்று அரசின் முத்திரை பதித்த ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளுடன் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி திருமண்டலத்தை பொறுத்தவரை எஸ்.டி.கே.ராஜன் அணி, டி.எஸ்.எப் அணி என இரண்டு அணிகளாக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெறும் திருமண்டல கமிட்டி உறுப்பினர்கள் இணைந்து லேட் செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள். லே செயலாளர் மற்றும் உப தலைவர், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் இணைந்து பேராயரை தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் இந்த தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஆனது நிர்வகிக்கப்படும்.
இந்த திருமண்டலத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி ஸ்தாபனங்கள் , முக்கிய பகுதிகளில் இடங்கள், பெரிய ஆலயங்கள், சமூக சேவை நிறுவனங்கள் என பல்வேறு சொத்துக்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு என பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இதை அனைத்தையும் நிர்வகிக்கக்கூடிய பதவிக்கு வரக்கூடிய இந்த தேர்தல் முக்கிய தேர்தலாக கருதப்படுகிறது.
இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் பணிகள் அனைத்தும் வீடியோகிராபர்கள் மூலம் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அரசு தேர்தல் ஆணையம் எவ்வாறு ஒரு தேர்தலை நடத்துமோ, அது போன்று வாக்களிக்கும் இடங்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்களிப்பவர்களுக்கு கைகளில் மை வைப்பது, வாக்களிக்கும் இடத்தை மறைவாக மறைத்து யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்வது, வாக்களிக்கும் பெட்டி, ஆகியவை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு நேர்த்தியாக இந்த திருமண்டல தேர்தல் ஆனது நடைபெற்று வருகிறது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications