மிரட்டல் அல்ல திருந்தாவிட்டால் நடவடிக்கை நிச்சயம்..சீறிய முதல்வர் ஸ்டாலின்..அரண்டு போன முக்கியதலைகள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் பெற்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையேல் நடவடிக்கை உறுதி மிரட்டல் அல்ல எனவும், எங்கு சிறு தவறு நடந்தாலும் அதைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Recommended Video

    சீறிய முதல்வர் MK Stalin! அரண்டு போன முக்கியதலைகள் | Oneindia Tamil

    தூத்துக்குடி மாநகரில் கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " எங்கு சிறு தவறு நடந்தாலும், அதைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன், உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள், பெற்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையேல் நடவடிக்கை உறுதி, மிரட்டல் அல்ல, மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்றார்.

    சோதனைகளை கடந்து சாதனை

    சோதனைகளை கடந்து சாதனை

    தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த அண்ணா தலைமையில் திமுக ஆட்சியமைத்த நாள். சோதனைகள், அடக்குமுறைகள், அவதூறுகள் அத்தனையும் கடந்து மக்களின் பேரன்போடு எத்தனை சாதனைகள் படைத்துள்ளோம். பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் திமுக வாளும் கேடயமுமாகத் தமிழ்நிலத்தை என்றும் காக்கும்.

    பேரறிஞர் அண்ணா

    பேரறிஞர் அண்ணா

    பேரறிஞர் அண்ணா சொன்னது போல் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களை வாழ்த்துகிறேன். பின்னர் பாராட்டும் வகையில் பணி செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்.

    கட்டாயம் நடவடிக்கை

    கட்டாயம் நடவடிக்கை

    தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் சிலர் செய்த செயலால் வருந்தினேன். திமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் திமுகவினரை எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் நடவடிக்கை நிச்சியம்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+