தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீங்களா? 10th பெருசா MBBS பெருசா? போலீசாரை தெறிக்க விட்ட அரசு டாக்டர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தனக்கு சல்யூட் அடிக்கவில்லை எனக் கூறி அரசு மருத்துவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீங்களா? 10th பெருசா MBBS பெருசா? போலீசாரை தெறிக்க விட்ட அரசு டாக்டர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி சேர்க்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர் என்னோட கணவர்.. 2 பெண்கள்.. ஹரி நாடாருக்காக மாறி மாறி மோதிக்கொள்ளும் ஷாலினி - மலேசியா மஞ்சு!அவர் என்னோட கணவர்.. 2 பெண்கள்.. ஹரி நாடாருக்காக மாறி மாறி மோதிக்கொள்ளும் ஷாலினி - மலேசியா மஞ்சு!

    இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் (ஷோடோ டூட்டியில்) 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசு மருத்துவர்

    அரசு மருத்துவர்

    இந்நிலையில் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் வார்டுக்குள் வருகை தந்த அரசு மருத்துவர் ஒருவர் அங்கு சிறை கைதிகளுக்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைப் பார்த்து என்னை தெரியலையா, நான் தான் அரசு மருத்துவர், நான் வந்ததும் என்னைப் பார்த்து சல்யூட் அடிக்க தோணலையா, டாக்டர் பெருசா, போலீஸ் பெருசா, பத்தாம் கிளாஸ் பெருசா, எம்பிபிஎஸ் பெருசா, என எகிறியுள்ளார்.

    புலம்பிய காவலர்

    புலம்பிய காவலர்

    சார், ஒரு இடம் இரண்டு இடம் டூட்டி பார்த்தால் தெரியும், ஓராயிரம் இடத்தில் டூட்டி பார்த்ததால் எப்படி பளிச்சுனு ஞாபகத்துக்கு வரும் என டாக்டரிடம் அந்த போலீஸ் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான மருத்துவர் போலீசாரை தரக்குறைவான வார்த்தையில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சார், நானும் எம்.காம் படிச்சிட்டு தான் போலீஸ் வேலைக்கு வந்திருக்கேன். போலீஸை ரொம்ப கேவலமா பேசாதீங்க, எங்களோட உயர் அதிகாரிகள் வந்தால் சல்யூட் அடிக்க தான் ட்ரெய்னிங்கில் சொல்லி தந்துள்ளார்கள், நீங்கள் டாக்டர்ன்னு எனக்கு தெரியாது என போலீசாரும் பதில் கூறியுள்ளார்.

    பூதாகரமான விவகாரம்

    பூதாகரமான விவகாரம்

    உங்ககிட்ட இப்போது டாக்டர் அடையாள அட்டையும் பார்வையில் படும்படி இல்லை, ஒயிட் கோட்டும் போடவில்லை, ஸ்டெதெஸ்கோப்பும் கையில் இல்லை பிறகு எப்படி நான் டாக்டர் என்று அறிவேன் எனக் கூறிய அந்த காவலர் எங்க இன்ஸ்பெக்டர் ஐயா, எங்க டி.எஸ்.பி. ஐயா, எங்க எஸ்.பி. ஐயா சிவில் டிரஸ்ஸில் வந்தால் உங்களுக்கு எப்படி அடையாளம் தெரியும், நீங்கள் அவர்களுக்கு சல்யூட் அடிப்பீங்களா, நீங்கள் ஒரு அரசு ஊழியர், நானும் ஒரு அரசு ஊழியர் என பதிலுக்கு காவலர் பேச, இந்த விவகாரம் சில நிமிடங்களில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றதும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலையிட்டு டூட்டியில் இருந்த போலீசை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர்.

    போலீசார் கோரிக்கை

    போலீசார் கோரிக்கை

    அத்தோடு விவகாரம் முடிந்தது என கருதிய நிலையில். என்ன காரணமோ தெரியவில்லை, டாக்டரிடம் ஒரு பெட்டிஷனை வாங்கி டூட்டி பார்த்த போலீஸ் மீது சி.எஸ்.ஆர். போட முயற்சித்து வருகின்றனராம் போலீஸ் உயர் அதிகாரிகள். இதனை அறிந்த சக போலீசார் மனம் குமுறி போயுள்ளனர். டாக்டர் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியல, போலீசிடம் எகிற விவகாரம் வெளிவந்துள்ளது. வீடு, மனைவி, குழந்தைகள், என அனைத்தையும் மறந்து ஆரோக்கியத்தையும் இழந்து, சமூக விரோதிகளை எல்லாம் கடந்து பணி செய்கிற போலீசாருக்கு உரிய மரியாதை தர வேண்டுமெனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

    English summary
    The incident has caused a stir when the government doctor says a police on duty at the Kovilpatti Government Hospital in tutucorin district did not salute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X