கேஎப்சி சிக்கன்கள் சாப்பிட பாதுகாப்பானது! FSSAI விதிகளை பின்பற்றுகிறோம்.. KFC நிறுவனம் விளக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள கேஎஃப்சி சிக்கன் நிறுவனத்தின் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தாக தகவல் வெளியானது. இதையடுத்து ஓட்டலின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்ட்ட நிலையில், கேஎப்சி நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் பானிபூரியுடன் கொடுக்கப்படும் பாணியில் ரசாயன் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் பானிபூரி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பானி பூரிகளில் "பச்சை கலர்" செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு: அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தூத்துக்குடியில் சில ஓட்டல்களிலும், சாலையோர கடைகளிலும், பானிபூரி மட்டுமல்லாமல், பழைய கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.. உடனே தூத்துக்குடியில் உள்ள மற்ற ஓட்டல்களிலும் ஆய்வு நடந்தது.
ரசாயனம் பயன்படுத்தப்பட்டது: அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல கேஎஃப்சி சிக்கன் நிறுவனத்தின் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தாக தகவல் வெளியானது. இந்த பழைய எண்ணையை சுத்திகரிக்க, மெக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற ரசாயனத்தை பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், மற்றும் இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் போன்றவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கோழிக்கறியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓட்டலின் உணவு பாதுகாப்பு உரிமத்திற்கு இடைக்கால ரத்து செய்து உத்தரவிட்டதுடன், மறு உத்தரவு வரும் வரை, ஓட்டலை திறக்க அனுமதி கிடையாது என்றும் எச்சரித்துவிட்டு சென்றனர். பிரபல நிறுவனமான கேஎஃப்சியில் தரம் குறைந்த சிக்கன்கள் கண்டறியப்பட்டதாக வெளியான தகவல் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
கேஎப்சி நிறுவனம் விளக்கம்: இந்த நிலையில், கேஎப்சி நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கேஎப்சி நிறுவனம் உணவு தயாரிப்பின் போது சிறந்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச தரத்தை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. நாட்டின் முன்னணி சப்ளையர்களிடம் இருந்து உயர் தர ஆயில் மற்றும் சிக்கன்கள் வாங்கப்படுகிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI ) நிர்ணையித்த பாதுகாப்பு மற்றும் தர நிலைகளை பின்பற்றியே இவை வாங்கப்படுகிறது.
சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது: சமீபத்தில் ஊடகங்களில் வெளியான தகவலுக்கு நாங்கள் விளக்கம் அளிக்க விரும்புகிறோம். மெக்னீசியம் சிலிகேட்டை தூய்மைப்படுத்தும் ஏஜெண்டாக FSSAI - தரப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே கேஎப்சியில் வழங்கப்படும் அனைத்து சிக்கன்களும் விதிகளின் படி சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை.
தற்போது எழுந்துள்ள இந்த விவகாரத்தில் விரைவான மற்றும் பயனுள்ள தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாடு முழுவதும் விற்பனையாகும் கேஎப்சி பொருட்கள் உயர்தரம் கொண்டது என்றும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்பதை நாங்கள் நுகர்வோருக்கு உறுதி அளிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications