தந்தையை கொன்ற திருச்செந்தூர் கோயில் யானை! நினைவுநாளில் பாகனின் மகள்கள் செய்த செயல்! நெகிழ்ச்சி
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உதயகுமார் உள்பட இருவர் உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில் யானை பாகனின் மகள்கள், யானை தெய்வானையிடம் அவர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அதிலும் சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் இங்கு ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் யானைக்காக ஒரு குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மதியம் 3 மணியளவில் யானை இருந்த இடத்தில் இருந்து பயங்கர சப்தம் வந்தது. இதையடுத்து கோயில் ஊழியர்கள் போய் பார்த்தனர். அப்போது யானை பாகன் உதயகுமாரும், அவரது உறவினர் சிசிபாலன் ஆகியோரும் யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.
உடனே அவர்கள் இருவரையும் மீட்ட கோயில் நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த யானை 2006 ஆம் ஆண்டு முதல் திருச்செந்தூர் கோயிலில் இருந்து வருகிறது. கடந்த 18ஆண்டுகளில் ஒரு முறை கூட யாரிடமும் கோபத்தை காட்டாத நிலையில் திடீரென யானை பாகனை தாக்கி கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து வனத்துறையினரும் கால்நடை பராமரிப்பு துறையினரும் கடந்த 11 நாட்களாக யானையை பராமரித்து வேறு பாகனின் உதவியுடன் உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். ஆனால் பாகன் உதயகுமாரை தாக்கிய வருத்தத்தில் இருந்த யானை உணவே உட்கொள்ளாமல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து யானைக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானை இருந்த மண்டபத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து யானையின் மனநிலை அமைதியாக இருந்ததை அடுத்து அதை கோயிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு பக்தர்களிடமும் சகஜமாக பழகியது. உதயகுமாரும் சிசிபாலனும் இறந்து ஓராண்டு ஆன நிலையில், யானை பாகன் உதயகுமாரின் மகள்கள் அக்ஷரா, அகல்யா ஆகிய இருவரும் இன்று திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தனர். அங்கு தெய்வானை இருக்கும் இடத்திற்கு சென்று அதற்கு தர்பூசணி, பலாப்பழம், கரும்பு, ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழை உள்ளிட்ட பழங்களை கொடுத்தனர்.
இதை தெய்வானை வாங்கிக் கொண்டது. பின்னர் இருவரையும் தும்பிக்கையால் தடவி கொடுத்து யானை தனது அன்பை வெளிப்படுத்தியது. இருவரும் அதன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். வேறு யாராக இருந்தால் அந்த யானை மீது கோபப்பட்டிருப்பர். என்னதான் யானை ஏதோ ஒரு கோபத்தில் பாகனை தாக்கியிருந்தாலும் அதை உணர்ந்து இந்த சிறுமிகள் செயல்பட்டது அவர்களது நற்குணத்தையும் உதயகுமார் அந்த யானை மீது எத்தனை பாசம் வைத்திருந்தார் என்பதையும் அந்த யானை குறித்து தனது மகள்களிடம் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்பதையுமே காட்டுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications