பதை பதைக்க வைத்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு!
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்தது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமாக இயங்கி வந்தது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையால் நிலம், நீர், காற்று ஆகியன மாசடைந்ததால் பெரியவர்கள், குழந்தைகள் என பலருக்கும் மூச்சுத் திணறல், இதய நோய் உள்ளிட்டவை ஏற்பட்டது.

இந்நிலையில் மே 22-ஆம் தேதி ஆட்சியர் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தங்களது 100-ஆவது நாள் போராட்டத்தை எட்டினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட அவர்கள் சென்றனர். அப்போது அங்கு 144 உத்தரவு போடப்பட்டிருந்ததால் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல தடை விதிக்கப்பட்டது.
எனினும் அவர்கள் மீறி புறப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசினர். பின்பும் திடீரென போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.
[எதுக்கு போட்டிப் போடுவதுனு வெவஸ்தை இல்லையா உங்களுக்கு.. அநியாயமா ஒரு உயிர் போச்சே!]
இதனிடையே போலீஸார் தடியடி தாக்குதலில் சிக்கிய ஒட்டப்பிடாரம் கீழமுடிமண் கிராமத்தை சார்ந்த ஜஸ்டின் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத் தூத்துக்குடி கலவரத்தில் தாக்கப்பட்டு, பரோல் முடிந்து சிறைக்கு சென்ற நிலையில் அவர் மரணமடைந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக ஆனது.
இந்நிலையில் கோமா நிலைக்கு சென்ற ஜஸ்டின் கடந்த திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார். இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications