அரண்ட அண்ணாமலை.. அதுக்கு மேல எடப்பாடி.. "கிளம்பு கிளம்பு, அந்துபோச்சு.. அலப்பற கிளப்புறோம்"..ஓ காட்
தூத்துக்குடி: அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு வந்துள்ள நிலையில், இதை அதிமுகவினரும் ஆமோதித்து வரவேற்று வருகிறார்கள்.. இந்த அணுகுமுறையை, பாஜகவினர் உற்றுகவனித்து வருகிறார்கள்.
"அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லியிருந்தார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார்: கட்சியின் முடிவையே தான் எப்போதும் சொல்வேன் என்று ஜெயக்குமார் கூறியிருந்தால், அது எடப்பாடி பழனிசாமியின் கருத்தாகவும், ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாகவும் பார்க்கப்பட்டது.. அதற்கேற்றார்போல், அதிமுக தலைவர்கள் இதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்..
எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், "அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு. அதுவும் டாலர் நோட்டு.. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு" என்றார். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியோ, அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது.. இது ஒரு தலைவருக்கான தகுதியும் கிடையாது" என்றார்.
"கூட்டணியும் கிடையாது... ஒரு புண்ணாக்கும் கிடையாது" என்று டென்ஷனாக சொன்னார் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார்.. இப்படி வெளிப்படையாகவே கூட்டணி பற்றி பேசிய நிலையில், அதை போஸ்டர் அடித்தும் ஒட்ட துவங்கிவிட்டார்கள் அதிமுகவினர்..
ஆடு மேய்க்க: "ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது... நன்றி மீண்டும் வராதீர்கள், கூட்டணியில் பாஜக இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு.. நாளை நமதே... 40ம் நமதே" என்ற வாசகங்கள் அதில் அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால், பாஜகவோ, சைலண்ட் மோடுக்கு போய்விட்டது.. சோஷியல் மீடியாவிலோ, பொதுவெளியிலோ அதிமுக குறித்தோ கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என்று பாஜகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது.. அதேபோல, பாஜகவை விமர்சிக்க கூடாது என்று அதிமுகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. ஆனாலும் புகைச்சல் அதிகமாகி கொண்டே வருகிறது.
அண்ணாமலை: அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து அதிமுக அழுத்தம் தந்துகொண்டே வருகிறது. இப்படியே தொடர்ந்தால் தேர்தலின்போது ஒருங்கிணைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்பதால் அண்ணாமலையை மாற்ற வேண்டுமென அதிமுக தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
ஆனால், "அண்ணாமலையை மாற்ற முடியாது... அவர் மாநில தலைவராகவே நீடிப்பார். போய் தேர்தல் வேலையை பாருங்க" என்று மூத்த தலைவர் நட்டா ஆர்டர் போட்டுவிடவும், அதிர்ந்துபோய் ஊர் திரும்பிய அதிமுக தலைவர்கள், இன்று என்ன முடிவெடுக்க போகிறார்கள் தெரியவில்லை.
கிளம்பு கிளம்பு: இந்த நிலையில், அதிமுகவை கிண்டல் செய்யும் வகையில் மறுபடியும் பாஜக, அதிமுகவை சீண்டியிருக்கிறது.. பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பாக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. அதில், "கிளம்பு.! கிளம்பு !! அந்து போச்சு கிளம்பு ! கிளம்பு !! அலப்பற கிளப்புறோம்! தலைவரு நிரந்தரம்" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது, அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இவங்க 2 தரப்பின் பஞ்சாயத்தும் எப்போது முடியும்? எங்கே போய் முடியும்? என்றே தெரியலையே என்று நொந்து கொள்கிறார்களாம் இரு கட்சி தொண்டர்களும்..!!!
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications