அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க காரணமே திமுக தான்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதிரடி பேட்டி!
தூத்துக்குடி: திமுக பெற்ற அடிப்படை உரிமைகளால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க முடிந்தது என்று அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனால் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என அறிவிகப்பட்டது.
அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் முதற்கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கைக்கு நிவாரணம்
இதன் தொடர்ச்சியாக இரண்டவது கட்டமாக பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பலை அனுப்புவதற்காக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் தூத்துக்குடி வந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான், தமிழ்நாடு மக்கள் மத்திய அரசு கொண்டு வந்த நினைக்கும் நீட் தேர்வு, வேளாண் சட்டம் போன்றவற்றை போலதான் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தையும் நினைக்கின்றனர். அதனால் தான் தமிழகத்தில் எதிர்ப்பு அதிகம் உள்ளது.

ஒற்றை தலைமை
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர் மறைவுக்கு பின் தொடர்ச்சியாக நடந்து வரும் சம்பவம் இது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையிடாது. ஏனென்றால் அதிமுகவில் பெரிய அடிமை யார்?, சின்ன அடிமை யார்? என்பதை மட்டும் தான் பாஜக பார்க்கும் என்று விமர்சித்தார்.

படிக்க வைத்தோம்
தொடர்ந்து திமுக குறித்து தவறாக விமர்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படித்து பட்டம் பெற்றவர். அவருக்கு திமுகவின் வராலாறு, அடித்தளம், கொள்கை, லட்சியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் திமுக வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் திமுக உருவாகியதினால் தான் கஷ்டப்படும் மக்கள் வளர்ச்சியடைய முடிந்தது. திமுக பெற்ற அடிப்படை உரிமைகளால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க முடிந்தது. கொள்கை இல்லாத இடத்தில் இருந்து கொண்டு அண்ணாமலை சிக்கித் தவித்து வருகிறார் என்று அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் தெரிவித்தார்.

தூத்துக்குடி டூ இலங்கை
மேலும் இலங்கைக்கு இதுவரை இரு கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது கட்ட நிவாரண பொருட்களும் அனுப்பும் திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்வது எளிதாக இருப்பதால் மூன்றாவது கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியும் தூத்துக்குடியில் இருந்தே தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications